உயர்மட்ட பாலத்திற்காக காத்திருக்கும் கிராமங்கள்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
பழையனூர் : பழையனூரைச் சுற்றி ஓடாத்தூர், வல்லாரேந்தல், சேந்தநதி, எஸ்.வாகைகுளம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலர் தேவைக்காக தினசரி பழையனூர் வந்து செல்கின்றனர், இக்கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் பழையனூர் வழியாகவே வந்து செல்கின்றன. பழையனூருக்கும் இக்கிராமங்களுக்கும் இடையே கிருதுமால் நதி குறுக்கிடுகிறது. மழை காலங்களில்

பழையனூர் : பழையனூரைச் சுற்றி ஓடாத்தூர், வல்லாரேந்தல், சேந்தநதி, எஸ்.வாகைகுளம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மக்கள் பலர் தேவைக்காக தினசரி பழையனூர் வந்து செல்கின்றனர், இக்கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் பழையனூர் வழியாகவே வந்து செல்கின்றன. பழையனூருக்கும் இக்கிராமங்களுக்கும் இடையே கிருதுமால் நதி குறுக்கிடுகிறது. மழை காலங்களில் நான்கு மாதம் நதியில் தண்ணீர் செல்லும் போது பழையனூருடன் தொடர்பு துண்டிக்கப்படும், பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வது கிடையாது.

தேர்தலில் தவறாது இடம் பெறும் வாக்குறுதி கிருதுமால் நதியின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என்பதுதான், ஆனால் இன்றுவரை நிறைவேறவே இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது தரைப்பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டுமான பணியின் போதே கிராமமக்கள் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும். தரை மட்ட பாலத்தால் பயனில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். பழையனூர் அரசு பள்ளியில் இப்பகுதிகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மழை காலங்களில் தண்ணீர் செல்லும் போது சீக்கிரமாகவே வீடுகளை விட்டு கிளம்பும் மாணவர்கள் நதியை கடந்த பின் ஈர உடைகளை காயவைத்து அதன்பின் செல்வது வழக்கம். இன்று வரை நிறைவேற்றப்படாத கோரிக்கை பழையனூர்- ஓடாத்தூர் இடையே கிருதுமால் நதியின் மீது உயர் மட்ட பாலம் கட்டாதது தான், இனியாவது கிராம மக்களின் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X