டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை, கட்டடங்கள் சேதம்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சிவகாசி : சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.) மருத்துவமனையில் கட்டட சேதத்தாலும், டாக்டர்கள் பற்றாக்குறையாலும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் பட்டாசு நகரமான சிவகாசியில் பட்டாசு ஆலை, அட்டை மில் தொழிலாளர்கள் வசதிக்காக சிவகாசி ஆனையூர் ஊராட்சியில் 1987 ல் 50 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டது. இங்கு ஒரு
டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை, கட்டடங்கள் சேதம்

சிவகாசி : சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.) மருத்துவமனையில் கட்டட சேதத்தாலும், டாக்டர்கள் பற்றாக்குறையாலும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் பட்டாசு நகரமான சிவகாசியில் பட்டாசு ஆலை, அட்டை மில் தொழிலாளர்கள் வசதிக்காக சிவகாசி ஆனையூர் ஊராட்சியில் 1987 ல் 50 படுக்கை வசதிகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு தினமும் 120 பேர் வரை வெளி நோயாளிகளாகவும் 20 பேர் வரை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரலாற்றில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக நடந்த சிறப்பு பெற்றது இந்த மருத்துவமனை.

ஆனால் தற்சமயம் அறுவை சிகிச்சை மருத்துவர், எலும்பு சிகிச்சை நிபுணர் இல்லாமல் மருத்துவமனை தள்ளாடுகிறது. 20 டாக்டர்கள் பணி புரிய வேண்டிய நிலையில் 11 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 30 நர்சுகளுக்கு பதிலாக 15 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.தரம் உயர்த்தியும் பலனில்லை


மருத்துவமனை 2000ல் 100 படுக்கை வசதியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் கூடுதல் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இருக்கின்ற டாக்டர்களும் நர்சுகளும் சிகிச்சை அளிக்கவும் சிரமப்படுகின்றனர்.கட்டடம் கட்டி 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் அனைத்து இடங்களிலுமே கட்டடம் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது.


செயல்படாத லிப்ட்


மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து கட்டடத்தின் உள்ளேயும் இறங்குகின்றது. 3 தளம் கொண்ட மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக லிப்ட் செயல்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்காக வரும் முதியவர்கள், காயமடைந்தவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் இடவசதி இல்லாமல் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர், செவிலியர் சிரமப்படுகின்றனர்.


பதம்பார்க்கும் ரோடு


மருத்துவமனையின் வளாகத்தில் போடப்பட்டுள்ள ரோட்டில் கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. எனவே மருத்துவமனை வளாகம் முழுவதுமே ரோட்டினையும் சீரமைக்க வேண்டும்.அம்பேத்குமரேசன், பட்டாசு தொழிலாளி, முருகன் காலனி,சிவகாசி: இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் தொடர் சிகிச்சைக்கு சிரமப்பட வேண்டியுள்ளது. ஆபரேஷன் செய்வதற்கு எலும்பு முறிவு டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது.

அதிக அளவில் பணம் செலவழித்து எங்களால் சிகிச்சை பெற வழியில்லை. எனவே மருத்துவமனையில் எலும்பு முறிவு டாக்டர் , கூடுதல் டாக்டர்கள், நர்ஸ்கள் பணி அமர்த்த வேண்டும்.ரவி, பட்டாசு தொழிலாளி மீனம்பட்டி: மருத்துவமனை கட்டப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்சமயம் கட்டத்தில் பெரும்பான்மையான இடங்கள் சேதமடைந்துள்ளது. விரிசல் ஏற்பட்ட கட்டடத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே கட்டடத்தின் அனைத்து பகுதிகளுமே மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவற்றில் காயம் அடைந்து வருகின்றவர்கள் எளிதில் மாடிகளுக்கு செல்ல லிப்ட் செயல்படவில்லை. எனவே லிப்ட் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசோக், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை: கட்டட சேதம், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை குறித்தும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அருகில் ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில் இதனை அகற்றி மருத்துவமனையின் விரிவாக்க பணியை மேற்கொள்ளலாம். வேறு இடத்தில் குடியிருப்புகளை கட்டுவது குறித்தும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.'' என்றார்.

தீர்வு: கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்வதன் மூலம் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் எளிமையாக சிகிச்சை பெறுவர். மருத்துவமனையின் அருகிலேயே அரசுக்குச் சொந்தமான காலியிடம் ஏராளமாக உள்ளது. இங்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை கட்டுவதன் மூலம் தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கும். அதன்படி மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டால் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு விடிவு காலம் பிறக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X