விருதுநகரில் 6 மாதத்தில் 4 பேர் உடல் உறுப்பு தானம்: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ மனையில் ஆறு மாதங்களில் நான்கு பேர் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.ரத்த தானம், கண் தானம் உள்ளிட்டவை அதிகரித்துள்ள நிலையில் உடல் உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டாக்டர்கள், நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.பல்வேறு நோய்களால் உடல் உறுப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ மனையில் ஆறு மாதங்களில் நான்கு பேர் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரத்த தானம், கண் தானம் உள்ளிட்டவை அதிகரித்துள்ள நிலையில் உடல் உறுப்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டாக்டர்கள், நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.பல்வேறு நோய்களால் உடல் உறுப்பு தானத்திற்கு நோயாளிகள் காத்திருப்பது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 33 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 13ல் மட்டுமே உடல் தானத்திற்கான சான்றளிக்கும் உரிமத்தை பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மூளைச் சாவு அடைந்தவரின் சிறுநீரகம், கல்லீரல், இதயம், தோல், விழி வெண்படலம், எலும்புகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற முடியும். அரசு மருத்துவ மனையில் இருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் அங்குள்ள நோயாளிகளுக்கே வழங்கப்படும்.தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் தகவல்படி நடப்பாண்டில் பிப். முதல் ஆக. வரை 18 பேரின் உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன.

இதில் விருதுநகர் மாவட்டத்தில் 4 பேரும் அடங்குவர்.இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவ மனை டாக்டர் ் ஏகேஸ்வரி கூறியதாவது:தமிழகத்தில் தற்போது 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும், 21 பேர் கல்லீரல், இதயத்திற்காக 6 பேரும் தானம் பெற காத்திருக்கின்றனர்.மேலும் உடல் தானம் செய்த ஒருவரின் எலும்புகளை 25 நோயாளிகளுக்கு பொருத்த முடியும். அதோடு இறந்தவரின் ஜவ்வு பகுதியை 4 பேருக்கு பயன்படுத்தலாம்.

விபத்தில் உறுப்புகளைஇழந்தவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சை அளிக்க அவர்களது உடம்பில் உள்ள தோல், எலும்பு எடுத்து பொருத்த வேண்டியுள்ளது. இதனால் அவதி இருமடங்காகிறது. எனவே உடல் தானம் அதிகரித்தால் பலரின் வாழ்வு மேம்படும். இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X