தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியத் தொகை...ரூ.1,000 உயர்வு; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு | Dinamalar

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியத் தொகை...ரூ.1,000 உயர்வு; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | |
புதுச்சேரி : 'நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திரஓய்வூதியத் தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:பட்ஜெட் மீது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
 தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியத் தொகை...ரூ.1,000 உயர்வு; சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரி : 'நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாதாந்திரஓய்வூதியத் தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:



பட்ஜெட் மீது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில் மாநிலத்தின் நிதி ஆதாரம் என்ன? கடன் எவ்வளவு, செலவு எவ்வளவு? என்பது ஒளிவு, மறைவின்றி விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற வருவாயைக் கொண்டு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் இருக்கலாம். நிச்சயமாக எனது அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும்.பிரதமர் கூறியதுபோல், நிச்சயமாக புதுச்சேரியை 'பெஸ்ட் புதுச்சேரி'யாக மாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.



அதற்கான நிதியை திரட்டுவதில் அரசு கவனம் செலுத்தும். எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களின் உறுதுணையோடு 'பெஸ்ட் புதுச்சேரி' கொண்டு வருவதற்கான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப் டாப், விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் என அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அரசு செயல்படுத்தும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களையும் சேர்த்துதான் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோன்று மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதுச்சேரி மக்களுக்கு நிச்சயம் முழுமையாக கிடைக்கும்.அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதை ஒப்புக் கொள்கிறேன்.



ஜனாதி பதி, நமது ஐ.ஏ.எஸ்., அதி காரிகள், மக்கள் மனநிலையை அறிந்து விரைவாக செயலாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். அதனை நான் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.மக்களின் மனநிலையைத்தான் எம்.எல்.ஏ.,க் கள் இந்த மன்றத்தில் பிரதிபலிக்கின்றனர். ஆதலால், நமது செயலர்கள், மக்களின் மனநிலையை அறிந்து விரைவாக செயலாற்ற வேண்டும் என்பது எனது எண்ணம்.எதையும் காலத்தோடு, நேரத்தோடு செய்தால்தான் சரியாக இருக்கும். அதற்கேற்ப கோப்புகள் விரைவாக செல்ல வேண்டும்.வங்கிகளில் கடன் பெறும்போது, ஹட்கோவில் வாங்கலாமா? அல்லது நபார்டில் வாங்கலாமா என்பதை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பணிகளை எடுப்பதிலும், முடிப்பதிலும் தாமதமாகிறது. அதுபோன்ற நிலை இல்லாமல் அதிகாரிகள் விரைவாக செயலாற்ற வேண்டும்.



துறை இயக்குநர்கள், அதிகாரிகள் எல்லாம் மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்தை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்.கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உண்டு. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த 75வது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில் தியாகிகளை மறந்துவிட்டதாக உறுப்பினர்கள் கூறினர். தியாகிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். மேலும், உயிரோடு உள்ள 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் நமக்குத் தேவையான நிதியைக் கேட்டுள்ளேன். மத்திய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதி 60:40 விகிதாச்சாரத்தை 100 சதவீதமாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளேன்.



அதுவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும், ரூ.2,000 கோடி அவசியம் தேவை என மத்திய அரசி டம் கேட்டுள்ளேன். குறைந்தது ரூ.800 கோடியாவது தற்போது தேவை என மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். அவர், பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்தால் மறு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கித் தருவதாக கூறியுள்ளார்.மாநில அந்தஸ்து என்பது நமது கோரிக்கை. அதை மீண்டும், மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அதை நாம் நிச்சயமாக பெற வேண்டும் என்பது எனது எண்ணம். அதைப் பெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். கடன் பெறுவதிலும், அதனை விரைவாகப் பெற்று செலவு செய்வதிலும் அரசு கவனம் செலுத்தும்.நமது மாநிலத்தின் கடன் தொகை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதனையும், அதன் வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.



அதையும் மத்திய அரச செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பீகார் மாநிலத்திற்கு சலுகை வழங்கியது போல் நமது மாநில அரசின் கடன் மற்றும் வட்டியை திரும்ப செலுத்துவதில் 5 ஆண்டிற்கு விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்க எடுக்கப்படும்.அசலையும், வட்டியையும் முழுவதுமாக தள்ளு படி செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம். பிரதமர் அவசியம் செய்து கொடுப்பார் என் நம்பிக்கை இருக்கிறது.



ஆதலால் நாம் பெறுகின்ற கடனைச் சரியாக செலவு செய்ய வேண்டும். அதனை குறைவாக செலவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அரசு அறிவித்த அனைத்து திட்டங்களும் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X