திண்டுக்கல்லில் கிரிக்கெட் லீக் போட்டி

Added : ஆக 27, 2022 | |
Advertisement
திண்டுக்கல், ஆக.27-திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த லீக் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ஸ்ரீ.வி., ஆகிய கல்லூரிகளின் மைதானங்களில் நடந்தது.*பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்த போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது. பாலசுப்ரமணி 79. முத்துகாமாட்சி 58, விக்னேஷ் 55, பாஸ்கரன் 32, சுசில்குமார் 28 ரன்கள் எடுத்தனர்.



திண்டுக்கல், ஆக.27-

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த லீக் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., ஸ்ரீ.வி., ஆகிய கல்லூரிகளின் மைதானங்களில் நடந்தது.*பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்த போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது. பாலசுப்ரமணி 79. முத்துகாமாட்சி 58, விக்னேஷ் 55, பாஸ்கரன் 32, சுசில்குமார் 28 ரன்கள் எடுத்தனர். மணிகண்டன், சந்தோஷ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஏ.எம்.சி.சி., அணி 25.2 ஓவரில்10விக்கெட்டிற்கு 94 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. காலீஷ்வரன் 65 ரன்கள் எடுத்தார்.மாதேஸ்வரன் 5விக்கெட் வீழ்த்தினார்.*ஆர்.வி.எஸ்.,மைதானத்தில் நடந்த போட்டியில் காந்திகிராம் அணி 24.4 ஓவரில்10விக்கெட்இழப்பிற்கு 98 ரன்களில் எடுத்தது. பார்த்திபன் 28 ரன்களும், தேவேந்திரகுமார் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.வசந்ததாஸ் ஸ்வீட்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன் எடுத்து வென்றது. பாலாஜி 25, கார்த்திகேயன் 37 ரன்கள் எடுத்தனர்.சக்திவேல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.*ஆர்.வி.எஸ்.,மைதானத்தில் நடந்த போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர் சி.சி., அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 எடுத்தது. முகமது பஹிம் 49, மாறன் 46, லட்சுமி நாராயணன் 37, சரவணன் 34 எடுத்தனர். தேவேந்திரகுமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.வசந்தாஸ் ஸ்வீட்ஸ் அணி 44 ஓவர்களில்10விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஸ்ரீபாலாஜி 44, ஜெயகார்த்திபன் 36, ரியாஸ்கான் 32, வசந்தகுமார், அரவிந்த் 29 ரன்கள் எடுத்தனர். அருள் சதீஷ்ராஜா 5, கஸ்பர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X