வெட்டிய மரத்தை அகற்ற வேண்டாமா

Added : ஆக 27, 2022 | |
Advertisement
மதுரை : சமயநல்லூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நுாறுவயது புளியமரம் தீப்பிடித்து எரிந்ததால் வெட்டப்பட்டு 2 மாதங்களாகியும் வருவாய்த்துறை அகற்றவில்லை.ஜூன் 24 ல் சமூக விரோதிகளால் புளியமரத்தின் உட்பகுதியில் தீவைக்கப்பட்டது. 5 மணி நேரத்திற்கு மேல் தீ எரிந்ததால் மரத்தை அகற்ற வேண்டும் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர். கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர்

மதுரை : சமயநல்லூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நுாறுவயது புளியமரம் தீப்பிடித்து எரிந்ததால் வெட்டப்பட்டு 2 மாதங்களாகியும் வருவாய்த்துறை அகற்றவில்லை.

ஜூன் 24 ல் சமூக விரோதிகளால் புளியமரத்தின் உட்பகுதியில் தீவைக்கப்பட்டது. 5 மணி நேரத்திற்கு மேல் தீ எரிந்ததால் மரத்தை அகற்ற வேண்டும் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர். கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் ஊராட்சி ஒன்றிய அலுவலக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மரத்தை வெட்ட ஏற்பாடு செய்தார்.வெட்டிய மரத்தின் கிளைகள் அங்கேயே கிடப்பதால் கால்நடைகளுடன் வருவோர் சிரமப்படுகின்றனர்.

மரக்கிளையின் அடியில் விஷஜந்துகள் குடியிருக்கவும் வாய்ப்புள்ளதால் கால்நடை வளர்ப்போர் அச்சப்படுகின்றனர். 2 மாதங்களாகியும் வருவாய்த் துறையினர் ஒருவர் மாற்றி ஒருவர் சுற்றலில் விடுவதால் மரத்தை அப்புறப்படுத்த வில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X