போலீஸ் செய்திகள் | Dinamalar

போலீஸ் செய்திகள்

Added : ஆக 27, 2022 | |
கோயிலில் நகை பறிப்புமதுரை: சோழவந்தான் முள்ளிப்பள்ளம் சுந்தரி 68. அழகர்கோவிலில் பிரசாத ஸ்டால் அருகே வந்தபோது நெரிசலை பயன்படுத்தி இவரது 5 பவுன் நகையை மர்மபெண் திருடினார். அவரை அப்பன்திருப்பதி போலீசார் தேடி வருகின்றனர்.மூவர் மீது வழக்குமதுரை: டி.வி.எஸ்., நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இருநாய்கள் சண்டை போட்டபோது, அங்கிருந்த மூவர் கட்டையால் தாக்கியதில் நாய் ஒன்று
போலீஸ் செய்திகள்

கோயிலில் நகை பறிப்பு

மதுரை: சோழவந்தான் முள்ளிப்பள்ளம் சுந்தரி 68. அழகர்கோவிலில் பிரசாத ஸ்டால் அருகே வந்தபோது நெரிசலை பயன்படுத்தி இவரது 5 பவுன் நகையை மர்மபெண் திருடினார். அவரை அப்பன்திருப்பதி போலீசார் தேடி வருகின்றனர்.

மூவர் மீது வழக்கு
மதுரை: டி.வி.எஸ்., நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இருநாய்கள் சண்டை போட்டபோது, அங்கிருந்த மூவர் கட்டையால் தாக்கியதில் நாய் ஒன்று இறந்தது. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் மயூர் ஹசிஜா புகாரில் அடையாளம் தெரியாத மூவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த நாய் 40 நாள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தியவர் கைது
மேலுார்: சொக்கம்பட்டி பழ வியாபாரி வசந்தியிடம் 40, நேற்று முன்தினம் இரவு அம்பலக்காரன்பட்டி பாலமுருகன் 35, இலவசமாக பழம் கேட்டார். தரமறுத்த வசந்தியை கத்தியால் குத்தியதாக பாலமுருகன் கைது செய்யப்பட்டார். --

கூரையை பிரித்து திருடியவர் கைது
அலங்காநல்லுார்: பூதகுடி பழனிகுமார். டீக்கடை வைத்துள்ளார். ஆக.,17ல் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.5500 திருடப்பட்டது. அலங்காநல்லுார் போலீசார் அதேபகுதி ஆனந்தராஜை 20, கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி பலி
திருமங்கலம்: காமராஜர்புரம் கார்த்தி 32. கப்பலுார் சிட்கோவில் தனியார் பைப் கம்பெனியில் மெஷின் ஆப்பரேட்டராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

------கைதிக்கு கஞ்சா கொடுத்தவர் கைது
திருமங்கலம்: குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு நேற்று பெருங்குடி கைதியை போலீசார் அழைத்து வந்தனர். அவரை சந்தித்த பெருங்குடி முத்துராமன் 50, பேனா கொடுப்பது போன்று கஞ்சாவை சுருட்டி கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

கஞ்சா: மாணவர்கள் கைது

உசிலம்பட்டி:

எஸ்.பி., சிவபிரசாத் தனிப்படை போலீசார் பேரையூர் ரோட்டில் கஞ்சா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். இரண்டு டூ வீலர்களில் வந்த உசிலம்பட்டி தனியார் கல்லுாரி மாணவர்கள் கணவாய்பட்டி ராம்குமார் 21, காளப்பன்பட்டி ஸ்ரீராம் 18, மற்றும் கணவாய்பட்டி பாண்டிச்செல்வம் 38, ஆகியோரை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

முதியவர் மரணம்
அவனியாபுரம்: மதுரை தாசில்தார் நகர் குமரேச பாண்டியன் 72. மகளுடன் மும்பை செல்வதற்காக நேற்று விமான நிலையம் வந்தார். காத்திருப்போர் அறையில் இருந்தவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

சூடான எண்ணெய் ஊற்றியவர் கைது
சமயநல்லுார்: ஊர்மெச்சிகுளம் கட்டபுலி 28, தோடனேரி முருகபாண்டி 22. ஆட்டோ டிரைவர்கள். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சமயநல்லுார் பஸ் ஸ்டாப் அருகே நின்ற கட்டபுலியுடன் தகராறு செய்த முருகபாண்டி, தள்ளுவண்டி கடையில் இருந்த சூடான எண்ணெயை எடுத்து ஊற்றினார். முதுகு வெந்த நிலையில் கட்டபுலி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். முருகபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X