வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 49வது நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கபட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று(ஆக.,27) பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கும் லலித் நவ.,8 ல் ஓய்வு பெற உள்ளார். 1957 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த அவர், 1983 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார்.