விநாயகர் சதுர்த்தி வழக்கு உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வு முன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி முறையிட்டதாவது: விநாயகர் சதுர்த்தியையொட்டி தென் மாவட்டங்களில் ஊர்வலம் நடத்த, சிலைகள் வைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கலாகின்றன. இவை இரு வெவ்வேறு தனி நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வு முன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி முறையிட்டதாவது: விநாயகர் சதுர்த்தியையொட்டி தென் மாவட்டங்களில் ஊர்வலம் நடத்த, சிலைகள் வைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கலாகின்றன. இவை இரு வெவ்வேறு தனி நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் ஒரே நிவாரணத்திற்கு மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. இதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை பின்பற்றுவதில் நடைமுறைச் சிரமங்கள் ஏற்படும்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான வழக்குகளை ஏதாவது ஒரு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நீதிபதிகள்: பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X