மாணவர்களிடம் போதை பழக்கம் கவலை அளிக்கிறது!

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோவை பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியின், 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் பேசியதாவது: கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்க்கிறது. தலைசிறந்த, 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. அதேபோல், தலைசிறந்த 21 பல்கலைகள், 32 கல்லுாரிகள், 10 ஆராய்ச்சி நிறுவனங்கள், 35 இன்ஜி.,
மாணவர்களிடம் போதை பழக்கம் கவலை அளிக்கிறது!

கோவை பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியின், 75ம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற முதல்வர் பேசியதாவது: கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்க்கிறது. தலைசிறந்த, 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. அதேபோல், தலைசிறந்த 21 பல்கலைகள், 32 கல்லுாரிகள், 10 ஆராய்ச்சி நிறுவனங்கள், 35 இன்ஜி., கல்லூரிகள், எட்டு மருத்துவக்கல்லுாரிகள், ஒன்பது பல் மருத்துவக் கல்லுாரிகள், இரு சட்டக்கல்லுாரிகள், ஆறு கட்டடக்கலை கல்லுாரிகள் உள்ளன. கல்வித் துறையில் சிறந்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான் மட்டும் முதல்வர் அல்ல. இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டுமென தான், 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து ஆற்றலும் கொண்ட இளைஞர்களாக, தமிழக மாணவர்கள் உள்ளனர். ஆனால், மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாவது கவலை அளிக்கிறது. அப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கவும், புதிதாகஅடிமையாவதை தடுக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு மாணவர் போதைக்கு அடிமையாவது அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பம் மற்றும் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. நல்ல கல்வி, நல்லொழுக்கத்தை மாணவர்களுக்கு அளிக்கும் கடமை, கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.இவ்வாறு, பேசினார்.


கின்னஸ் சாதனை


பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் சமீரன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியின் பவளவிழாவை முன்னிட்டு, கின்னஸ் சாதனைக்காக, 75 என்ற எண் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 75 ஆயிரத்து, 168 பானைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து சாதனைக்கான சான்றிதழை, கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகள் முதல்வரிடம் வழங்கினர். அதை முதல்வர் கல்லுாரி நிர்வாகத்திடம் வழங்கினார். கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், கட்டப்பட உள்ள திறந்தவெளி அரங்கத்துக்கான அடிக்கல்லை முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X