'மாஜி' அமைச்சர் வேலுமணி வழக்கு: விசாரணை வரும் 30க்கு தள்ளிவைப்பு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, அமைச்சராக பதவி வகித்த வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, 2018ல் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி

சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, அமைச்சராக பதவி வகித்த வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, 2018ல் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில், இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, வேலுமணிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என கூறப்பட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில், இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன.

'அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், 'வழக்கு ரத்து கோரிய மனுக்களின் மீது, தனி நீதிபதி முன் வாதாட வேண்டும்' என்றார்.மூத்த வழக்கறிஞரின் வாதம் தொடர்வதால், விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X