சில்லுன்னு கொஞ்சம் இளநீர் பாயாசம் குடிக்கலாமா?

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | |
Advertisement
பாயாசம் பிடிக்காதவர்கள் உண்டா... ? கொண்டாட்டாம்னாலே பாயாசம் தான் நம் ஊரில். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் குஷிதான் வீட்டில் பாயாசம் செய்தால். நம் உணவு முறைகளில் புதுமை புக ஆரம்பித்த பிறகு கல்யாணப் பந்திகளில் சோறு, சாம்பார், ரசம், ஜவ்வரிசி பாயாசம் என்பன மாறி புலாவ், நெய்சோறு, பிரியாணி என வந்துவிட்டது போல பாயாசத்திலும் வெரைட்டி வந்தாச்சு. அந்த வகையில்
ElaneerPayasam, Tendercoconut, coconutmilk, food, recipe, milk, Payasam, இளநீர் பாயாசம், பாயாசம், உணவு, ரெசிபி, இளநீர்,

பாயாசம் பிடிக்காதவர்கள் உண்டா... ? கொண்டாட்டாம்னாலே பாயாசம் தான் நம் ஊரில். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் குஷிதான் வீட்டில் பாயாசம் செய்தால். நம் உணவு முறைகளில் புதுமை புக ஆரம்பித்த பிறகு கல்யாணப் பந்திகளில் சோறு, சாம்பார், ரசம், ஜவ்வரிசி பாயாசம் என்பன மாறி புலாவ், நெய்சோறு, பிரியாணி என வந்துவிட்டது போல பாயாசத்திலும் வெரைட்டி வந்தாச்சு. அந்த வகையில் வந்ததுதான் இளநீர் பாயாசம். இதன் டேஸ்டே தனிதான். தற்போது திருவிழா, விசேஷம் என எங்கு சென்றாலும் பந்தியில் இளநீர் பாயாசமே நம்மை வரவேற்கிறது. ஹோட்டல், ரெஸ்டாரன்ட் சென்றாலும் இதையே பலரும் ஆர்டர் செய்கின்றனர். எனவே வீட்டிலேயே எளிதாக இளநீர் பாயாசம் செய்யும் வழிமுறையைப் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


பால் - 400 மி.லி.,

சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் பால் - 1 கப்
இளநீர் - 4
கண்டென்ஸ்டு மில்க் - 3 டே.ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் - 1 சிட்டிகை
பாதாம் பருப்பு - 6


latest tamil news





எப்படிச் செய்வது?



இளநீரில் வழுக்கையை தனியே பிரித்தெடுத்து சிறுசிறு துண்டுகளாக நன்றாக வெட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயில் இளநீரை சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

பசும்பாலை நான்கில் ஒரு மடங்காக வற்றும் வரை நன்றாகக் காய்ச்சவும். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால்கோவா செய்வதற்கு முந்தைய பதம் வந்தவுடன், சர்க்கரையை சேர்த்து கிளறி தனியாக எடுத்து வைக்கவும். இதில், கண்டென்ஸ்டு மில்க், தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.



latest tamil news



இந்த கலவையை இளநீர் வழுக்கையில் நன்றாக வடிகட்டிச் சேர்க்கவும். பாலைக் காய்ச்சும் போது அதில் ஏடுகள் இருக்கக்கூடும் என்பதால் கட்டாயமாக வடிகட்ட வேண்டும். அப்போதுதான் பாயாசத்தில் பிசிறு எதுவும் இல்லாமல் சுவையுடன் இருக்கும்.

பின்னர், இந்த கலவையை மீண்டும் நன்றாக கலக்கி அலங்காரத்துக்காக பொடியாக நறுக்கிய பாதாம் பருப்புகளை தூவினால், இளநீர் பாயாசம் ரெடி. இதை பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து சில்லென்று குடித்தால் சுவை அள்ளும்; குட்டீஸ்கள் விரும்பிக் குடிப்பர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X