கூலி தொழிலாளியின் ஆண்டு வருமானம் 9 லட்சம் என தவறாக சான்றளிப்பு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கூலித் தொழிலாளியின் ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய் என்பதை 'தினமலர்' செய்தி எதிரொலியாக திருத்தம் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புது காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாய கூலித் தொழிலாளி.கடன் பெறுவதற்காக உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ் கேட்டு சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்தார். அவருக்கு

கூலித் தொழிலாளியின் ஆண்டு வருமானம், 9 லட்சம் ரூபாய் என்பதை 'தினமலர்' செய்தி எதிரொலியாக திருத்தம் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி புது காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாய கூலித் தொழிலாளி.கடன் பெறுவதற்காக உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ் கேட்டு சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்தார். அவருக்கு கடந்த 23ம் தேதி வருமானச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், ஆண்டு வருமானம் 9 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து வெங்கடேசன் அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நேற்று, வெங்கடேசனின் வருமானச் சான்றிதழில், ஆண்டு வருமானம் 90 ஆயிரம் ரூபாய் என திருத்தம் செய்து வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X