பீஹாரில் இன்ஜினியர் வீட்டில் ரெய்டு: கோடிக்கணக்கில் ரொக்கம், நகை பறிமுதல்

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
பாட்னா: பீஹாரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் நிர்வாக பொறியாளர் வீட்டில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் , நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பீஹாரின் கிஷன்கன்ஜ் டிவிசனில், நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் சஞ்சய் குமார் ராய். இவர், லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து, வருமானத்திற்கு அதிகமாக
 பீகார், பீஹார் இன்ஜினியர்,  சஞ்சய் குமார் ராய்,  Bihar Engineer, sanjaykumarrai,   பொறியாளர், ரெய்டு, bihar, kishangang,

பாட்னா: பீஹாரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் நிர்வாக பொறியாளர் வீட்டில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம் , நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பீஹாரின் கிஷன்கன்ஜ் டிவிசனில், நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் சஞ்சய் குமார் ராய். இவர், லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.


latest tamil newsஅதில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் சிக்கியது. இங்கு ஒரு கோடி பணம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. பணத்தை எண்ணுவதற்காக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. பல சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது.

அவர் தொடர்புடைய வேறு சில இடங்களில் 3 கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
27-ஆக-202222:47:49 IST Report Abuse
சீனி பெங்களூரில் நகராட்சி பொறியாளர்கள் வீட்டில் உள்ள டம்மி தண்ணீர் போகும் பைப் அமைத்து லஞ்சப்பணத்தை பதுக்கியுள்ளனர், ரெய்டு வரும்போது ஜன்னலுக்கு வெளியே பலகோடி வீசப்பட்ட கூத்துக்கள் எல்லாம் நடந்துள்ளது. எத்தனை முறை ரெய்டு பண்ணாலும், பலகோடி தான் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் மாநராட்சி, பஞ்சாயத்து யூனியன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்னா, வருடம் ஆயிரக்கணக்கான கோடிகளில் காண்டிராக்ட்டுக்கு குறைந்து 20% சதம் கமிசன்னா அந்த 200 கோடி விட்டில தான் இருக்கும், எனவே அரசு எப்ப வேணா ரெய்டு பண்ணி மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்துக்கொள்ளலாம். இல்லன்னா நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணித்துறை, நீர்வளம் போன்ற பசையுள்ள மந்திரி பதவிகள் ஏன் கட்சியில் சீனியர் ஆட்களுக்கு வழங்கப்படுகிறது, பலகோடி கமிசன், கட்டிங் கண்டிப்பாக இருக்கு. அதே போல் இந்த பதவிக்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முதல், பணி மாற்றம் வரை பல கோடி மேலிட கமிசனும் உண்டு. மோதி என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஊழல் அதிகாரிகளை ஒன்றும் பண்ண முடியாது, குறைந்தது 2வருடதுக்கு ஒருமுறை சீனியர் அதிகாரிகளை ரெய்டு பண்ணி வருமானத்துக்கு அதிகம் சம்பதித்ததை எடுத்து செல்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதே போல் அதிகாரிகளின் உறவினர்களின் பெயரில் பல கோடி சொத்தை, சில லட்சத்துக்கு பதிவு செய்து சொத்து வாங்க ஆரம்பித்துவிட்டனர், எனவே ஆதர் மூலம் அனைவரையும் கண்காணிக்கவேண்டும். அந்த சொத்தின் மார்கெட் விலையை கோர்ட் எடுத்துக்கொண்டு ஊழலை கணக்கிடவேண்டும். ஒரு வாட்டி மாட்டும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்வதும் நாட்டுக்கு நல்லது தான். அண்ணாமலை ஆட்சி அமைத்ததும், டிஸ்மிஸ் என்ற சட்டம் கொண்டுவந்தால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-ஆக-202210:20:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்.. ஹா ஹா .....
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
27-ஆக-202222:08:42 IST Report Abuse
Anantharaman Srinivasan பிஜேபி ஆளும் மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சந்தேகமேயில்லாமல் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ரெய்டு நடந்தால் கோடானுகோடி பணம்..
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202221:34:17 IST Report Abuse
Kalyan Singapore "வெளிநாடுகளில் வேலைக்குப்போனாலும் , அங்கு (ஒதுக்கீடு இல்லாததால்) உயர்ந்த ஜாதியிலிருந்து, இந்தியாவில் வேலை கிடைக்காமல் வந்தவர்கள் எல்லா வேலைகளையும் உயர் பதவிகளையும் (திறமையால்) பறித்துக்கொள்கின்றனர்" என்று ஒரு தமிழக கழக அமைச்சர் புலம்பினா ரே பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X