மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அன்பழகி .68. இவர் சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அன்பழகி .68. இவர் சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். நேற்று(ஆக.,26) இரவும் வழக்கம்போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கினார். இன்று காலை மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டுள்ளார்.
அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோதுதான் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் இருந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X