'டுவிட்டர்' அதிகாரிகள் மீது பார்லி., குழு அதிருப்தி

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | |
Advertisement
புதுடில்லி :தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக, சமூக வலைதளமான 'டுவிட்டர்' நிறுவன உயர் அதிகாரிகள் அளித்த பதில்கள், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு திருப்தி அளிக்க வில்லை.மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப விதிமுறைகளை சமூக வலைதளங்கள் பின்பற்றுவதை கண்காணிக்க, காங்., - எம்.பி., சசி தரூர் தலைமையில் பார்லி., நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில், எம்.பி.,க்கள்
'டுவிட்டர்' அதிகாரிகள் ர்லி., குழு அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக, சமூக வலைதளமான 'டுவிட்டர்' நிறுவன உயர் அதிகாரிகள் அளித்த பதில்கள், பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு திருப்தி அளிக்க வில்லை.

மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப விதிமுறைகளை சமூக வலைதளங்கள் பின்பற்றுவதை கண்காணிக்க, காங்., - எம்.பி., சசி தரூர் தலைமையில் பார்லி., நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவில், எம்.பி.,க்கள் கார்த்தி, மஹூவா மொய்த்ரா, ரஞ்சித் ரெட்டி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.சமூக வலைதளமான டுவிட்டரில் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து, அந்நிறுவன உயர் அதிகாரிகளிடம், பார்லி., நிலைக்குழுவினர் விசாரணை நடத்தினர்.


latest tamil news



இதில், டுவிட்டர் நிறுவன உயர் அதிகாரிகள் சமிரன் குப்தா, ஷகுப்தா கம்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விசாரணையின் போது, தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றிய கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் அளித்த பதில், நிலைக்குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதையடுத்து, அதிகாரிகளுக்கு நிலைக்குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X