சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ட்ரோன்'களால் எல்லையில் புதுவித ஆபத்து!

Added : ஆக 27, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
'ட்ரோன்'களால் எல்லையில் புதுவித ஆபத்து!அனைத்து மாநில டி.ஜி.பி.,க்களுடன் சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து விவரிக்கும், ஓய்வு பெற்ற மேஜர் மதன்குமார்: மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில், பயங்கரவாதம் உள்ளிட்டவை பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டு உள்ளது. பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிரா என,

சொல்கிறார்கள்


'ட்ரோன்'களால் எல்லையில் புதுவித ஆபத்து!அனைத்து மாநில டி.ஜி.பி.,க்களுடன் சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து விவரிக்கும், ஓய்வு பெற்ற மேஜர் மதன்குமார்: மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில், பயங்கரவாதம் உள்ளிட்டவை பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிரா என, ஐந்து மாநிலங்களில் பரவி இருந்த நக்சல்கள், தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுருங்கி விட்டனர்; அவர்களை ஒட்டுமொத்தமாக அடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம், 'கொரோசான்' என்ற புதிய அமைப்பை துவக்கிஇருக்கிறது. இந்த அமைப்பு, சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது வெற்றி பெற்றால், பிரான்ஸ் நாட்டில் அவ்வப்போது நடக்கும் மனித தாக்குதல்களை போல, நம் நாட்டிலும் நிகழலாம்; அதை தடுக்க வேண்டும்.நாட்டின் எல்லையோரங்களில், புதிய தலைவலியாக, 'ட்ரோன்'கள் வந்து சேர்ந்துள்ளன. முன்பெல்லாம் ஆயுதக் கடத்தல், ஆட்கள் ஊடுருவல், போதை மருந்து கடத்தலை செய்ய, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, ராணுவத்தின் கவனத்தை திசை திருப்புவர்.
தற்போது, சீனாவிடமிருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்துள்ளது பாகிஸ்தான். ஒவ்வொரு ட்ரோனும், 15 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லக்கூடியது.
இதை பயன்படுத்தி, அவ்வப்போது இந்திய பகுதிக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ட்ரோன்கள் வாயிலாக, 10 கிலோ ஹெராயினை அனுப்பினால், 20 கோடி ரூபாய் சரக்கு, பயங்கரவாதிகள் கைக்கு சென்று விடுகிறது. இதையும் தடுத்தாக வேண்டும்.
மிக நீண்ட கடற்கரை மற்றும் பல தீவுகள் உள்ளது நம் நாடு. அந்தமான் மற்றும் லட்சத் தீவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தமான், ராணுவத் தடம் உள்ள பகுதி; லட்சத்தீவு, மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. சமீபகாலமாக அங்கும் பயங்கரவாதிகள் ஊடுருவி, போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்து
உள்ளன.மேலும், கிரிப்டோ கரன்சிகளும், இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. ஒரு நபர் தன் இந்திய ரூபாயை எளிதில் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றிக் கொள்ள முடியும்.
அந்தப் பணத்தை பின் டாலர்களாக, யூரோக்களாக மாற்றி, வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்துக் கொள்ள முடியும். இந்தப் பிரச்னையை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.


பட்டியலின தலைவர்களின் பரிதாப நிலைமை!'தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' அமைப்பின் தலைவர் செல்லக் கண்ணு: தேனி மாவட்டம் ஆத்தங்கரைபட்டியைச் சேர்ந்த, பட்டியலின ஊராட்சித் தலைவருக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில், பட்டியலின ஊராட்சித் தலைவரின் பெயரை பலகையில் எழுத, அங்கிருந்த ஆதிக்க ஜாதியினர் அனுமதிக்கவில்லை.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கால் ஊராட்சியின் பெண் பட்டியலின தலைவரை பணி செய்ய விடாமல், அங்குள்ள வார்டு உறுப்பினர்கள் தடுத்திருக்கின்றனர்; அதை எதிர்த்து, அவர் போராட்டமும் செய்திருக்கிறார்.
இப்படி பல்வேறு சம்பவங்கள், எங்களுக்கு புகாராக வந்ததால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், முதற்கட்டமாக, 24 மாவட்டங்களில் உள்ள, 386 ஊராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், தமிழகத்தில் மிக மோசமான அளவில் பிரச்னைகள் இருப்பதை கண்டறிந்தோம்.

எங்களது ஆய்வில், '20 ஊராட்சித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. 42 ஊராட்சித் தலைவர்களுக்கு பெயர் பலகை கிடையாது; 22 ஊராட்சித் தலைவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை; 33 ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி அலுவலகத்திலேயே உட்கார அனுமதிக்கப்படுவதில்லை' என்பது தெரிய வந்துள்ளது.
பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு, ஆண்டின், ௩௬௫ நாட்களும் போராட்டமாகவே உள்ளது. ஆதிக்க ஜாதியினருக்கு நடுவே, ஒரு பட்டியலின ஊராட்சித் தலைவர் இருக்கிறார் என்றால், அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் துணைத் தலைவரின் அராஜகப் போக்கு மிகவும் அதிகம்.
'நேற்று வரைக்கும், என் முன்னாடி கையை கட்டிக்கிட்டு நின்ன... இப்போ என் கூட சரிசமமா நீ உட்காருவதா... உனக்கு, நான் மரியாதை செய்யணுமா?' என்று மோசமாக பேசுவதாக, பல ஊராட்சித் தலைவர்கள் எங்களிடம் புகார் கூறினர்.
ஆதிக்க ஜாதியினரின் தலையீடு ஒரு பக்கம் இருக்கிறது எனில், பல இடங்களில் அரசு அதிகாரிகளும், பட்டியலின தலைவர்களை மிகவும் மரியாதை குறைவாகவே நடத்துகின்றனர்.
மற்ற சமூக ஊராட்சித் தலைவர்களுக்கு எளிதாக கிடைக்கும் எல்லா விஷயங்களும், பெரும் போராட்டத்துக்கு பிறகே பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு கிடைக்கின்றன.
மொத்தமுள்ள, 2,700 ஊராட்சிகளில் நாங்கள் ஆய்வு நடத்தியது, 389 இடங்களில் தான். தமிழகம் முழுதும் நடத்தியிருந்தால், இந்த ஆய்வின் முடிவுகளில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கடுமையாக உயர்ந்திருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-ஆக-202208:48:48 IST Report Abuse
spr முன் யோசனையின்றி மோடி அரசு செய்த செயல்களில் இதுவும் ஒன்று இவற்றைத் தடையின்றி எவரும் இயக்கலாம் என்று அறிவித்த பொழுதே இப்பிரச்சினை அறியப்படாத ஒன்றா
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
28-ஆக-202208:47:26 IST Report Abuse
spr இவற்றைத் தடையின்றி பயன்படுத்தலாம் என்று அறிவித்த பொழுதே இப்பிரச்சினை அறியப்படாத ஒன்றா? தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியே
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
28-ஆக-202208:29:55 IST Report Abuse
Dharmavaan வாய் கிழிய பேசும் திரட்டு முட்டாள் கட்சிகளின் பதில் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X