புதுச்சேரி : அரியாங்குப்பம் துாய இதய மரியன்னை மேல்நிலை பள்ளியில் 'பல்திறன் கண்காட்சி 2022' நடைபெற்றது.துவக்க நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஜான் ஹில்டா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் சிவகாமி கண்காட்சியை துவக்கி வைத்தார்.கண்காட்சியில மாணவர்கள் அனைத்து பாடப்பிரிவுகளில் உருவாக்கிய 800க்கும் மேற்பட்ட பல்வேறு படைப்புகளை பார்வைக்கு வைக்கப் பட்டன.10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.