வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'வனப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசை கண்டித்து நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் கூடலுாரில் அ.தி.மு.க. சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கும்' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஆட்சிக்கு வந்தால் வனவளம் சார்ந்த மற்றும் வனப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 'வன ஆணையம்' அமைக்கப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை எந்த முயற்சியையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் பல்வேறு நிலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளன.
![]()
|
அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்தும் அரசு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வனப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கூடலுார் நகராட்சி அலுவலகத்தில் ஆக., 30 காலை 11:00 மணிக்கு பேரணி துவங்கும்.கூடலுார் காந்தி சிலை அருகே பேரணி நிறைவடையும். அங்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.