இந்தியா - பாக்., போட்டியை பார்த்தால் அபராதம்: காஷ்மீரில் கல்லூரி நிர்வாகம் உத்தரவு

Updated : ஆக 28, 2022 | Added : ஆக 28, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஸ்ரீநகர்: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான்,

ஸ்ரீநகர்: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.


latest tamil news


இன்று 'ஏ' பிரிவில் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.



இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி மாணவர்களுக்கு பிறப்பித்த உத்தரவு: துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் பல நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த போட்டியை விளையாட்டாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மாறாக, கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் எந்தவித ஒழுங்கீன செயலிலும் ஈடுபடக்கூடாது.




latest tamil news

இன்று நடக்கும் போட்டியின் போது மாணவர்கள் அமைதியாக விடுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டும். மற்ற மாணவர்கள் அறைகளுக்கு செல்லக்கூடாது. கும்பலாக அமர்ந்து போட்டியை பார்க்கக்கூடாது. இந்த தடையை மீறி, அறையில் அமர்ந்து போட்டியை பார்த்தால், அந்த மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போட்டி தொடர்பாக, சமூக வலைதளங்களில் எந்தவிதமான கருத்தையும் பகிரக்கூடாது. முக்கியமாக, போட்டி நடக்கும் நேரத்தில் விடுதி அறையை விட்டு வெளியே வரக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



கடந்த 2016ம் ஆண்டு, டுவென்டி-20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீசை, இந்தியா தோற்கடித்தது. அப்போது, இந்த கல்லூரியில், உள்ளே இருந்து மற்றும் வெளியில் இருந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
28-ஆக-202220:35:51 IST Report Abuse
தமிழ்வேள் No need to Tele the Match in Kashmir.. Block out....
Rate this:
Cancel
28-ஆக-202219:22:37 IST Report Abuse
சூரியா இந்தப் போட்டிக்கு வர்ணனை செய்யும் ரவிசாஸ்திரியே, இது மைதானம் அல்ல, போர்க்களம், இவர்கள் வீர்கள் அல்ல சிப்பாய்கள், பார்த்துக் கொண்டிருக்கும் இரசிகர்கள் படைவீரர்கள் என உசுப்பேத்திக் கொண்டிருந்தால் டிவியில் பார்ப்பவர்கள் மட்டும் விரலை சூப்பிக்கொண்டா இருப்பார்கள்?
Rate this:
Cancel
28-ஆக-202218:46:41 IST Report Abuse
இறைவி மத, நாட்டுப் பற்று சம்பந்தப்பட்ட சிறு உரசல்கள் கூட சுலபமாக பற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கும் எல்லையோர மாநிலம் என்பதால் கும்பலாக கூடி போட்டியைப் பார்க்கத் தடை விதித்துள்ளனர். ஏனென்றால் மாணவர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதில்லை. அவரவர் அறைகளிலே இருந்து பொட்டியைப் பார்க்கத் தடை இல்லை. கும்பலாக பார்க்கவும் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குத்தான் ₹ 5,000 அபராதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X