மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செப்டம்பா் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக, துவங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கூறினார்.