லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்: 13 பேர் பலி, 95 பேர் படுகாயம்

Added : ஆக 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கெய்ரோ: லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர்.வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.இந்த மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மோதல்: 13 பேர் பலி, 95 பேர் படுகாயம்

கெய்ரோ: லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர்.



வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.



இந்த மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹைதம் தஜோரியின் விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல - கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது.



இதில் துப்பாக்கிச் சூடு, வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்; 95 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் பல கட்டங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

John Miller - Hamilton,பெர்முடா
28-ஆக-202220:47:20 IST Report Abuse
John Miller அடி வாங்கினால்தான் அடங்குவோம் என்று ராஜா சண்முகம் ஜெயக்குமார் உதயகுமார் அர்ஜுன் சம்பத் என ஒரு கும்பலே தமிழ்நாட்டில் இருக்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X