உங்களது அறிக்கையை ஒரு கவுன்சிலர் கூட கண்டுக்கிறது இல்லையே... ஏன்னு யோசிச்சு பார்த்தீங்களா?

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:தமிழகத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு போதுமான பஸ் வசதியை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல், சிரமப்படும் பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத இடங்களில், ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, 'சிற்றுந்து' சேவைகளை
பேச்சு_பேட்டி_அறிக்கை, சசிகலா, ராமதாஸ், அன்புமணி, ஹெச் ராஜா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:


தமிழகத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு போதுமான பஸ் வசதியை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல், சிரமப்படும் பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத இடங்களில், ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, 'சிற்றுந்து' சேவைகளை செயல்படுத்த வேண்டும்.


யார் யாரோ விடும் அறிக்கைகளுக்கு எல்லாம் ஆளும் தரப்பு பதிலடி தருதே... உங்களது அறிக்கையை ஒரு கவுன்சிலர் கூட கண்டுக்கிறது இல்லையே... ஏன்னு யோசிச்சு பார்த்தீங்களா?பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:


தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு, 'அவுட்சோர்சிங்' என்ற முறையில், வெளியே இருந்து, 400 டிரைவர்களை நியமிக்க, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமைகளாக மாற்றும் நடைமுறையின் முதல் படியாகும்.


அரசியல்வாதிகள் சிலர், அப்பாவி தொண்டர்களை கூலிப்படை போல நடத்துறாங்களே... அதையும் தடுக்க குரல் கொடுங்களேன்!பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா பேட்டி:


தி.க., கூட்டம் நடத்த அனுமதிக்கும் காவல் துறை, ஹிந்து ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கிறது. தில்லை நடராஜரை இழிவாக பேசியவரை கைது செய்யாத காவல் துறை, 'கனல்' கண்ணனை கைது செய்தது. இப்படி ஒட்டுமொத்தமாக, தமிழக காவல் துறை, ஹிந்து விரோத போக்கில் செயல்படுகிறது.


காவல் துறையை தலையாட்டி பொம்மை போல, 'ஆட்டுவிப்பது' யார் என்பதில் தான் சூட்சுமம் அடங்கியிருக்குது!latest tamil news

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:


திருவண்ணாமலை மாவட்டம், கெங்கை சூடாமணி கிராமத்தில், தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கும், 4 வயது பெண் குழந்தை, பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இவரை போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு. இவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்; 'போக்சோ' வழக்கில் தண்டிக்க வேண்டும்.


இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு துாக்கு தண்டனை தந்தால் கூட தப்பில்லை!அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:


தனி ஒருவரின் அதிகார வெறியால், அ.தி.மு.க.,வை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்து, அதைத் தடுக்க மனசாட்சி கொண்ட நிர்வாகிகளுடன், கட்சி தொண்டர்கள் திரள வேண்டும். ஒற்றுமையை முன்னெடுக்கும், பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியில் திரள்வோம். அ.தி.மு.க.,வின் அவசரமும், அவசியமும் இது ஒன்று தான்.


நீங்க தான் அவசரப்படுறீங்க... மத்தபடி எல்லாரும், அவங்கவங்க வேலைகளை பார்த்துட்டு நிம்மதியா தான் இருக்காங்க!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

29-ஆக-202218:24:58 IST Report Abuse
மதுமிதா இதுவும் கடந்து போகும் இவரும் தான்
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
29-ஆக-202214:37:19 IST Report Abuse
S Regurathi Pandian ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிடுகிறார். அது அவரது உரிமை.
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
29-ஆக-202212:58:30 IST Report Abuse
Gopinathan S சசிகலா அறிக்கையை நிறைய பேர் படிச்சாங்களோ இல்லையோ, இங்க நீங்க அவங்களை கிண்டல் செய்ய போயி தெரியாதவர்களுக்கும் தெரிய வச்சுட்டீங்க...இதற்கு பெயர்தான் பிள்ளையார் பிடிக்க போயி குரங்கு வந்ததுன்னு சொல்லுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X