உலகம் வியக்கும்படி அப்படி என்ன சாதித்தார் மைக்கேல் ஜாக்ஸான்?

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆக.29 உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர், நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸனின் 64வது பிறந்தநாள். கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த அந்த மாபெரும் இசைக் கலைஞன் உலக இசை வரலாற்றில் ஓர் சகாப்தமென்றால் அது மிகையில்லை. சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லாத மைக்கேலின் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்ன, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் எனத்
ஹோல்ட் மை ஹேண்ட், மெலனின் நிறமி , விட்லிகோ நோய், மைக்கேல் ஜாக்ஸன், அமெரிக்க பாப் பாடகர், நடனக் கலைஞர், Hold My Hand, Melanin Pigmentation, Vitiligo, Michael Jackson, American Pop Singer, Michael Jackson Dancer

ஆக.29 உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர், நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸனின் 64வது பிறந்தநாள். கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த அந்த மாபெரும் இசைக் கலைஞன் உலக இசை வரலாற்றில் ஓர் சகாப்தமென்றால் அது மிகையில்லை. சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமில்லாத மைக்கேலின் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்ன, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் எனத் தெரிந்துகொள்வோமா?

ஆப்ரிக்க நாடுகளில் 19ம் நூற்றாண்டில் தெருக்களில் நடைபெறும் பாரம்பரிய நடனத்தில் தோன்றியது மூன்வாக். இதனை மைக்கேல் ஜாக்ஸானுக்கு முன்னர் பல ஆப்ரிக்க நடனக் கலைஞர்கள் தங்கள் நடனத்தில் சேர்த்துள்ளனர். ஆனால் அதனை உலகளவில் பிரபலமடையச் செய்தது மைக்கேல்தான். முன்னே நடப்பது போல பின்னோக்கி நகரும் கலையே மூன்வாக் எனப்படும். நிலவில் மனிதன் நடப்பதுபோன்று வித்யாசமாக நடப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது.


latest tamil newsஏழு வயதில் இருந்து சகோதரர்களுடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி, ஆடி வந்தார் மைக்கேல். பள்ளிப்படிப்பு, பிறந்தநாள், கிறிஸ்துமஸ் போன்றவை மைக்கேலுக்குத் தெரியாத விஷயங்கள். இசைப் பயிற்சி, பல்வேறு நகரங்களுக்குப் பயணம், , மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இதுதான் அவரது குழந்தைப் பருவத்தின் வாழ்க்கையாக அமைந்துவிட்டது. இசைத்துறை மைக்கேலுக்கு எவ்வளவோ செல்வத்தையும் புகழையும் அளித்தபோதிலும் அவரது குழந்தைப் பருவம் அவரிடமிருந்து தொலைந்து போனது.

முகமது அலி, கிறிஸ் டக்கர், வில் ஸ்மித், எலிசபெத் டெய்லர் என சமகால பிரபலங்களின் உற்ற தோழனாக விளங்கியவர் இளம் மைக்கேல்.

பேட், டேஞ்சரஸ், திரில்லர் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஆல்பங்கள் மூலமாகவே அதிக செல்வம் ஈட்டினாலும் சமூக அக்கறையுடனும் கருப்பின உரிமைகளுக்காகவும் அவ்வப்போது தனது பாடல்களில் நேரடி மற்றும் மறைமுக அரசியல் பேசினார் மைக்கேல்.


latest tamil newsஉலகளவில் தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதி அளித்த இசைக் கலைஞர் என்ற மைக்கேலின் சாதனையை அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆகி இன்றும் யாரும் முறியடிக்கவில்லை.

குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய மைக்கேல் அமெரிக்க காவல்துறையின் கொடூர விசாரணையில் பல வித சித்ரவதைகளை அனுபவித்தார். இந்த வழக்கு அவரது வாழ்வின் இறுதிவரை அவரது நிம்மதியை பறித்தது.

மேடை நிகழ்ச்சி ஒன்றில் தீவிபத்தில் சிக்கிய மைக்கேலின் தலைமுடி தீக்கிரையாகியது. இதனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விக்-களைப் பயன்படுத்தி மேடையில் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தினார்.

விட்லிகோ நோயால் பாதிக்கப்பட்ட மைக்கேலின் உடலில் மெலனின் நிறமி முற்றிலுமாக அழிந்தது. இதனால் வெளீர் நிறத்துக்கு மாறிய அவர், சூரியனின் புற ஊதாக் கதிர் தாக்கத்தால் உண்டாகும் தோல் புற்றுநோயில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள எங்கு சென்றாலும் குடையுடன் வலம்வருவார்.

மைக்கேல் மறைந்ததும் அவரது குரலில் வெளியான 'ஹோல்ட் மை ஹேண்ட்' என்கிற பாடலுக்கு மைக்கேலின் பழைய வீடியோக்கள் வைத்து மேட்ச் செய்யப்பட்டன. இந்த பாடல்தான் அவரது குரலில் வெளியாகிய கடைசி பாடல். இது அப்போது உலகளவில் இணையத்தில் அதிக வியூக்களைப் பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
30-ஆக-202211:33:54 IST Report Abuse
vbs manian உலக அளவில் இளைஞர்களை சொக்கு போடி போட்டு மயக்கியத்தில் இவரை மிஞ்ச எவருமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X