பூலாங்கிணறு அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 29, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் பாபு முன்னிலை வகித்தார்.முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன், வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவர் சக்கரபாணி பேசினார்.தவிர, பள்ளியில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 'இன்ட்ராக்ட் கிளப்' நிர்வாகிகள்
பூலாங்கிணறு அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உடுமலை:உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகி, தலைமை, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் பாபு முன்னிலை வகித்தார்.முன்னதாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன், வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவர் சக்கரபாணி பேசினார்.தவிர, பள்ளியில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 'இன்ட்ராக்ட் கிளப்' நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக ஜனனி, துணைத்தலைவராக சோபியா செயலராக வசந்த் நியமனம் செய்யப்பட்டனர். சிறப்பு விருந்தினராக வக்கீல் சத்தியவாணி கலந்து கொண்டு, போக்சோ மற்றும் அடிப்படை சட்டங்கள் குறித்து பேசினார். ஆசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X