மாவட்ட அளவில் விளையாட வால்பாறை மாணவியர் தேர்வு

Added : ஆக 29, 2022 | |
Advertisement
வால்பாறை:குறுமைய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கோட்டூர் குறுமைய அளவில், 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.இதே போல், பேட்மிட்டன் போட்டியில், கிருஷ்ணசெல்வி (பிளஸ் 1), மதுமிதா (பிளஸ் 1)
மாவட்ட அளவில் விளையாட வால்பாறை மாணவியர் தேர்வு

வால்பாறை:குறுமைய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கோட்டூர் குறுமைய அளவில், 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர்.இதே போல், பேட்மிட்டன் போட்டியில், கிருஷ்ணசெல்வி (பிளஸ் 1), மதுமிதா (பிளஸ் 1) ஆகியோர் வெற்றி பெற்றனர். வளைபந்து போட்டியில், கவிதா (பிளஸ் 2) வெற்றி பெற்றார்.குறுமைய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், மாவட்ட அளவில் அடுத்த மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் பரிசு வழங்கி பாராட்டினார். மாணவிகளிடையே மறைந்திருக்கும் பல்வேறு திறமைகளை வெளியில் கொண்டு வரும் வகையில், இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் மாணவிகள் சிறப்பாக விளையாடி, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்று, பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என, தலைமை ஆசிரியர் அறிவுறுத்தினார். விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரதீபா, ஷகீலா மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X