பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்க கோரிக்கை| Dinamalar

பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்க கோரிக்கை

Added : ஆக 29, 2022 | |
வால்பாறை:பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எஸ்டேட்களில் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில், பண்டிகை கால முன்பணமாக, 3,500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இதை உயர்ந்தி

வால்பாறை:பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், 40க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எஸ்டேட்களில் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு, சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில், பண்டிகை கால முன்பணமாக, 3,500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இதை உயர்ந்தி வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'தோட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு போராட்டத்துக்கு பின், தற்போது தினக்கூலியாக, 409.83 ரூபாய் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக, 3,500 மட்டுமே வழங்கப்படுகிறது.விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, இந்தாண்டு தீபாவளி பண்டிகை கால முன்பணமாக, ஆறாயிரம் ரூபாய் வழங்க எஸ்டேட் நிர்வாகம் முன் வர வேண்டும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X