ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர்செம்பரம்பாக்கத்தில் ஆய்வு

Added : ஆக 29, 2022 | |
Advertisement
செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர், நேற்று ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு துாய்மை இயக்க பணிகளை, ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் அப்துல் ராசிக், நேற்று முன்தினம், நேரில் ஆய்வு


செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர், நேற்று ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு துாய்மை இயக்க பணிகளை, ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் அப்துல் ராசிக், நேற்று முன்தினம், நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊராட்சியில் குப்பை அதிகமாக தேங்கும் பகுதிகள், அரசு பள்ளி, அங்கன்வாடி உள்ளிட்ட கட்டடங்களில் துாய்மை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.மேலும், 'பொதுமக்களிடம் இருந்து குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும்' என்று, அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X