தொழிலதிபர் கடத்தல் வழக்கில்பெண் மருத்துவர் கைது

Added : ஆக 29, 2022 | |
Advertisement
தி. நகர், தொழிலதிபர் கடத்தலில், மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.தி.நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன், 46, கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து கும்பலால் கத்திமுனையில் கார்களுடன் கடத்தப்பட்டார்.விசாரித்த மாம்பலம் போலீசார் சரவணனை மீட்டனர். மயிலாடுதுறை, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ், 42, உள்ளிட்ட ஏழு பேர் கும்பலை போலீசார் கைது
தொழிலதிபர் கடத்தல் வழக்கில்பெண் மருத்துவர் கைது


தி. நகர், தொழிலதிபர் கடத்தலில், மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.தி.நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன், 46, கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து கும்பலால் கத்திமுனையில் கார்களுடன் கடத்தப்பட்டார்.விசாரித்த மாம்பலம் போலீசார் சரவணனை மீட்டனர். மயிலாடுதுறை, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ், 42, உள்ளிட்ட ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கார்கள், இரு சக்கர வாகனம், ஏழு மொபைல் போன்கள், பொம்மை துப்பாக்கி, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஆரோக்கியராஜுக்கு, சவுடு மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி, ௪.௫ கோடி ரூபாய் வாங்கி சரவணன் ஏமாற்றியதால், அவரை கடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.சரவணன், ஆரோக்கியராஜ் ஆகியோர் அடிக்கடி 'பப்'புக்கு செல்லும் பழக்கம் உடையவர்கள். அங்கு, அவர்களுக்கு பெண் மருத்துவர் அமிர்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சரவணனிடம் மீண்டும் பணத்தை வசூல் செய்ய, அவரை கடத்தி மிரட்டுமாறு,ஆரோக்கிய ராஜுக்கு அமிர்தா யோசனை சொன்னதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில், கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த பெண் மருத்துவர், அமிர்தா, 48, தலைமறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X