கிண்டி தொழிற்பேட்டை அடையாள சின்னம்5 அடி உயர்த்தி அமைக்க நடவடிக்கை

Added : ஆக 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கிண்டி, பூமிக்குள் புதைந்த, 68 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கிண்டி தொழிற்பேட்டையின் அடையாள சின்னம், சாலை மட்டத்தில் இருந்து, ௫ அடி உயர்த்தி அமைக்கப்படுகிறது.கிண்டி தொழிற்பேட்டை வளாகம், 402 ஏக்கர் பரப்பு உடையது. கடந்த, 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, சாலை மட்டத்தில் இருந்து ௫ அடி உயரத்தில், தொழிற்சாலை சின்னம் மற்றும் இந்திய வரைபடம் அடங்கிய, அடையாள சின்னம்
கிண்டி தொழிற்பேட்டை அடையாள சின்னம்5 அடி உயர்த்தி அமைக்க நடவடிக்கை


கிண்டி, பூமிக்குள் புதைந்த, 68 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கிண்டி தொழிற்பேட்டையின் அடையாள சின்னம், சாலை மட்டத்தில் இருந்து, ௫ அடி உயர்த்தி அமைக்கப்படுகிறது.கிண்டி தொழிற்பேட்டை வளாகம், 402 ஏக்கர் பரப்பு உடையது. கடந்த, 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, சாலை மட்டத்தில் இருந்து ௫ அடி உயரத்தில், தொழிற்சாலை சின்னம் மற்றும் இந்திய வரைபடம் அடங்கிய, அடையாள சின்னம் அமைக்கப்பட்டது.சுற்றி, வட்ட வடிவில் மரக்கன்று நட்டு, ரவுண்டானா கட்டமைப்பில் இருந்தது. பின், புதர்களை அகற்றி, மரங்கள் பராமரிக்கப்பட்டன.இந்நிலையில், சாலை மட்டம் உயர்ந்ததால், அடையாள சின்னம் பூமிக்குள் ௫ அடி உள்வாங்கியது. இதைஅடுத்து, சின்னம் மற்றும் ரவுண்டானாவை உயர்த்தி அமைக்க, சிட்கோ நிர்வாகம் முடிவு செய்தது.இதையடுத்து, 7 லட்சம் ரூபாய் செலவில், புனரமைப்பு பணி நடைபெறுகிறது. அடையாள சின்னம், 3,000 கிலோ எடை உடையது. இதனால், மரத்தை வேரோடு துாக்கி வேறு இடத்தில் நடுவதுபோல், அடையாள சின்னத்தையும் பூமிக்கடியில் உள்ள கட்டமைப்புடன் சேர்த்து, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு துாக்கப்பட்டது.பின், சாலை மட்டத்தில் இருந்து, 5 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இதோடு, ரவுண்டானாவும் கருங்கல் கட்டமைப்பில் உயர்த்தப்படுகிறது. அதில், நீரூற்று, மின்விளக்கு, மரக்கன்றுகள் நட்டு அழகுப்படுத்தப்பட உள்ளன.இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கிண்டியில், 68 ஆண்டு பழமை வாய்ந்த தொழிற்பேட்டையின் அடையாள சின்னத்தை, புனரமைப்பு செய்து பாதுகாக்கும் சிட்கோ நிர்வாகத்தை, தொழில் நிறுவனங்கள் பாராட்டின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
30-ஆக-202214:01:18 IST Report Abuse
Raja இந்த நீரூற்று போன்றவை வைக்க கோர்ட் தடை செய்ய வேண்டும். நீரூற்றுக்கள் எங்கும் வேலை செய்து இதுவரை தமிழகத்தில் பார்த்ததில்லை. பணம் கொள்ளையடிக்கும் வழி, மேலும் இது பேஷனும் அல்ல இப்பொழுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X