தங்கம் சேமிப்பு திட்டத்தில்1,165 கிராம் விற்பனை

Added : ஆக 29, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம், 'காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், தங்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக 1,165 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது' என, அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தஅலுவலகத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் செயல்பட்டு



காஞ்சிபுரம், 'காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், தங்க சேமிப்பு திட்டத்தின் வாயிலாக 1,165 கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது' என, அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தஅலுவலகத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.ஆக., 22ம் தேதி முதல் 26ம் தேதி வரையில், தங்கம் சேமிப்பு திட்டத்தில், பொதுமக்கள் சேர்ந்து பயன்பெறலாம் என, அஞ்சல் துறை அறிவித்தது. அதன்படி, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், 1,165 கிராம் தங்கம் விற்பனையாகி உள்ளது.இதன் வாயிலாக 66.54 லட்சம் ரூபாய் மத்திய அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளது. பண்டிகை தினங்களாக இருப்பதால், குறைந்த தங்கம் விற்பனையாகி உள்ளது என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாபு தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X