எக்ஸ்குளுசிவ் செய்தி

இணக்கமாக செயல்படுவோம்: அ.ம.மு.க., தினகரன் அழைப்பு!

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
''லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, அனைவரும் இணைந்து செயல்படுவோம்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார்.தஞ்சாவூரில் நேற்று அவர் கூறியதாவது:பழைய பகை, கசப்பு உணர்வு அனைத்தையும், ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவோம். தி.மு.க., என்ற மக்கள் விரோத, தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு, சரியான வழியை பின்பற்றி செயல்பட
TTV, Dinakaran, தினகரன்

''லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, அனைவரும் இணைந்து செயல்படுவோம்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று அவர் கூறியதாவது:பழைய பகை, கசப்பு உணர்வு அனைத்தையும், ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவோம். தி.மு.க., என்ற மக்கள் விரோத, தீயசக்தியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு, சரியான வழியை பின்பற்றி செயல்பட வேண்டும்.


நட்புக் கரம்



'நேற்று வரை நடந்ததை மறந்து, நல்லது நடக்கும் எனச் செயல்படுவோம். வருங்காலத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அதைத் தான், நானும் அவருக்கு கூறுகிறேன்.ஜெயகுமார் எதுவேண்டுமானாலும் சொல்லி, மீண்டும் அரசியல் ரீதியாக தோற்க வேண்டும் என நினைத்தால், அவர் செயல்படட்டும்.

ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது, ஒரே கட்சியில் இணைந்து செயல்படுவது அல்ல. யாரும், யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும்.ஒரு தாய் மக்களாக இருந்து, பிரிந்து இருக்கிறோம். சட்டசபைத் தேர்தலில், நான் நட்புக் கரம்நீட்டினேன்; அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.


பெருந்தன்மை




அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில், அவர்கள் பழையதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, அனைவரும் இணைந்துசெயல்படுவோம்.இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-ஆக-202213:43:28 IST Report Abuse
duruvasar பன்னீர்செல்வத்தையும், சசிகலாவையையும் ஏன் அ ம மு க வில் சேர்த்துக்கொள்ளவில்லை ?
Rate this:
Cancel
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) ஒன்றிணைந்து கொள்ளையடிப்போம் என்கிறீர்களா தினகரன்? முதலில் நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பல லட்சம் கோடி மக்கள் பணத்தை மக்களுக்கே திரும்ப கொடுங்கள். அப்புறம் பேசலாம்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-ஆக-202208:18:09 IST Report Abuse
VENKATASUBRAMANIAN நான் உமி கொண்டு வருகிறேன் நீ அவல் கொண்டு வா ஊதி சாப்பிடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X