வீடு, மாடித்தோட்ட திட்டம்18 ஆயிரம் பேர் பலன்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின், வீடு, மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தில், 18 ஆயிரம் பேர் பலன் அடைந்து உள்ளனர்.தோட்டக்கலை துறை சார்பில், வீட்டு தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க, ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், நகர்ப்புற பகுதி



திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், தோட்டக்கலை துறையின், வீடு, மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தில், 18 ஆயிரம் பேர் பலன் அடைந்து உள்ளனர்.தோட்டக்கலை துறை சார்பில், வீட்டு தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க, ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், நகர்ப்புற பகுதி மக்களுக்கு, ஆறு வகை காய்கறி விதை, செடி வளர்க்கும் பை, ௨ கிலோ தென்னை நார் கட்டி, 400 கிராம் உயிர் உரம், உயிரி கட்டுப்பாட்டு காரணி 200 கிராம், இயற்கை பூச்சி கொல்லி 100 மி.லி., ஆகிய 900 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 225 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.கிராமப்பகுதி மக்கள் வீட்டு தோட்டம் அமைக்க, கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை, பாகல், புடலை உள்ளிட்ட 12 காய்கறி விதைகள், 15 ரூபாய்க்கும்; நெல்லி, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட மூலிகை பயிர்கள், 25 ரூபாய் மானியத்திலும் வழங்கப்படுகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில், ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தில், 6,000 பேர்; மாடித் தோட்டம் திட்டத்தில், 6,000 பேர்; உணவே மருந்து திட்டத்தில், 6,000 பேர் என, மொத்தம், 18 ஆயிரம் பேர் பலன் அடைந்து உள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X