பா.ஜ., தேசிய தலைவராக நட்டா... நீடிப்பாரா? தர்மேந்திர பிரதானுக்கும் வாய்ப்பு

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 30, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பா.ஜ., தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, அவரே தலைவர் பதவியில் தொடர வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது வேறொருவரை கட்சி தலைமை நியமிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ., தேசிய தலைவர் பதவி மிகுந்த முக்கியத்துவம்
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா... நீடிப்பாரா? தர்மேந்திர பிரதான்,  வாய்ப்பு


பா.ஜ., தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதை அடுத்து, அவரே தலைவர் பதவியில் தொடர வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது
வேறொருவரை கட்சி தலைமை நியமிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பா.ஜ., தேசிய தலைவர் பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவி. தேசிய அளவில் அனைத்து மட்டத்திலும் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு தலைவருக்கு உள்ளதால், அவர் முழு நேரம் கட்சிப் பணியாற்ற கூடியவராக இருப்பது
அவசியம். தேசிய தலைவர் பதவியை ஒருவர் ஒரு முறை மட்டுமே வகிக்க முடியும் என பா.ஜ.,வில் சட்டம் இருந்தது. கடந்த 2012ல் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஒரு நபர் இரு முறை தலைவர் பதவியை வகிக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டது.


latest tamil news
இந்த சட்ட திருத்தத்தை தொடர்ந்து, பா.ஜ.,வின் மூத்த தலைவர் நிதின் கட்கரி, தேசிய தலைவராக இரு முறை பதவி வகித்தார். தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2014 - 19 வரையில் பா.ஜ., தேசிய தலைவராக பதவி வகித்தார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமித் ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, 2019 ஜூன் மாதம், ஜே.பி.நட்டா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2020 ஜனவரியில் நடந்த
உட்கட்சி தேர்தலில், பா.ஜ., தேசிய தலைவராக நட்டா போட்டியின்றி தேர்வானார்.

இவரது மூன்றாண்டு பதவிக்காலம் 2023 ஜனவரியில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், புதிய தலைவராக வேறு நபர் நியமிக்கப்படுவாரா அல்லது நட்டாவுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ., தேசிய தலைவராக நட்டா பொறுப்பேற்றது முதல், பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை அவர் திறம்பட கையாண்டு இருந்தாலும், அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற நவம்பரில் நடக்கிறது.
இதில், நட்டாவின் பணி கட்சியினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக நட்டா இருந்து வருகிறார். இவர் தலைவர் பதவியில் தொடர, கட்சியில் எதிர்ப்பு எதுவும் இல்லை. எனவே, நட்டாவுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரம், ஒடிசாவைச் சேர்ந்தவரான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கட்சியினர் மத்தியில்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் வாயிலாக, ஒடிசாவில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ., அங்கு மேலும் வலுவடைய இது வாய்ப்பாக அமையும் என்றும் தலைவர்கள் கருதுகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
30-ஆக-202209:39:29 IST Report Abuse
Narayanan the post either MLA/MP nor minister. It is better to provide new guy
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X