மண்ணையும் விட்டுவைக்கலீங்க!விவசாயி கண்ணீர் புகார்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
அன்னுார்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் கடத்தப்பட்டுள்ளதாக அன்னுார் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது :நான் பல ஆண்டுகளாக சத்தியில் வசித்து வருகிறேன். எங்களது பூர்வீக விவசாய பூமி அல்லப்பாளையத்தில் உள்ளது. சமீபத்தில் இங்கு வந்து பார்த்தபோது, சிலர் எங்களுடைய அனுமதி இன்றி,

அன்னுார்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் தனபாக்கியம். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் கடத்தப்பட்டுள்ளதாக அன்னுார் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது :நான் பல ஆண்டுகளாக சத்தியில் வசித்து வருகிறேன். எங்களது பூர்வீக விவசாய பூமி அல்லப்பாளையத்தில் உள்ளது. சமீபத்தில் இங்கு வந்து பார்த்தபோது, சிலர் எங்களுடைய அனுமதி இன்றி, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக நுாற்றுக்கணக்கான லோடு மண்ணை எடுத்து சென்றுள்ளனர். இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,200 லோடு மண் கடத்திச் சென்றுள்ளனர். சேதப்படுத்தப்பட்ட எங்கள் நிலத்தை சரி செய்து தர வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X