கிழக்கு குறுமைய போட்டிகளத்துல அனல் பறக்குது...! வெற்றி இலக்கை அடைய வீரர்கள் போராட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டிகளில், எதிரணி வீரர்களை லாவகமாக சமாளித்து, தங்களது அணி வெற்றி பெற வீரர்கள் போராடினர்.பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி நடத்துகிறது. இந்த போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தன.அதில், 14 மற்றும் 17 வயது பிரிவுகளில்,
கிழக்கு குறுமைய போட்டிகளத்துல அனல் பறக்குது...! வெற்றி இலக்கை அடைய வீரர்கள் போராட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டிகளில், எதிரணி வீரர்களை லாவகமாக சமாளித்து, தங்களது அணி வெற்றி பெற வீரர்கள் போராடினர்.பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி நடத்துகிறது. இந்த போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தன.அதில், 14 மற்றும் 17 வயது பிரிவுகளில், மாணவர்களுக்கான, கால்பந்து, வாலிபால், கபடி, கூடைப்பந்து, ேஹண்ட் பால், த்ரோ பால், ஹாக்கி, பால் பேட்மின்டன், கோ கோ, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.ஒவ்வொரு போட்டியிலும், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி தங்களது அணி வெற்றி பெற போராடினர்.பார்வையாளர்களாக இருந்த மாணவர்கள், தங்களது அணி வீரர்களுக்கு ஆதரவாக கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.ஹேண்ட்பால் போட்டியில், 14 வயதினருக்கான முதல் போட்டியில், கே.பி.எஸ்., அணியும், சிவாலிக் பள்ளியும் மோதின. அதில், கே.பி.எஸ்., அணி வெற்றி பெற்றது.17 வயதினருக்கான போட்டியில், கே.பி.எஸ்., அணியும், விக்னேஸ்வரா வித்யா மந்திர் அணியும் மோதின. அதில், விக்னேஸ்வரா வித்யா மந்திர் பள்ளி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. செப்., 1ம் தேதி மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X