மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா| Dinamalar

மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா

Added : ஆக 30, 2022 | |
கோவை:ஒத்தக்கால் மண்டபம் ஆதிஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், பிரசித்தி பெற்ற ஆதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெரும் பொருட் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு கால வேள்விகளுக்கு பிறகு,
மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா

கோவை:ஒத்தக்கால் மண்டபம் ஆதிஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், பிரசித்தி பெற்ற ஆதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெரும் பொருட் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு கால வேள்விகளுக்கு பிறகு, நேற்று அதிகாலை திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. முதலில் கோபுர விமானங்களுக்கும், தொடர்ந்து மூலத் திருமேனிகளுக்கும் திருக்குட நன்னீராட்டு நடந்தது.தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் கும்பாபிஷேகத்தை தலைமை வகித்து நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெருந்திருமஞ்சனம் அலங்கார வழிபாடு, பதின்மங்கல காட்சிக்கு பிறகு நடந்த பேரொளி வழிபாட்டை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். கும்பாபிஷேக விழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, இன்று முதல் தினமும் மாலை 6:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கும் என்று, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X