குடிநீரில் கழிவுநீர்; மாநகராட்சி மீது புகார்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் சாவித்திரி நகர் பகுதியில், சாக்கடை நீர் தேங்கி, வீடுகளில் உள்ள குடிநீர்த் தொட்டிக்குள் கசிவதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, சாவித்திரி நகரைச் சேர்ந்த கலைவாணி கூறியதாவது:சாக்கடையில் நீர் தேங்கி நிற்கிறது. சுமார் 3 அடி உயரம் வரை மண் அடைப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளாக புகார் கொடுத்தும் துார்வாருதலோ, அடைப்பு

கோவை:கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் சாவித்திரி நகர் பகுதியில், சாக்கடை நீர் தேங்கி, வீடுகளில் உள்ள குடிநீர்த் தொட்டிக்குள் கசிவதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக, சாவித்திரி நகரைச் சேர்ந்த கலைவாணி கூறியதாவது:சாக்கடையில் நீர் தேங்கி நிற்கிறது. சுமார் 3 அடி உயரம் வரை மண் அடைப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளாக புகார் கொடுத்தும் துார்வாருதலோ, அடைப்பு நீக்கும் பணியோ செய்யவில்லை. இதனால், தேங்கும் கழிவுநீர், வீட்டில் உள்ள குடிநீர்த் தொட்டிக்குள், குழாயில் வருவதுபோல் வந்து விழுகிறது. புகார் கொடுத்த போதே, சாக்கடையை சீர்படுத்தி இருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது. குடிநீருக்கு பணம் கட்டினால், மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை நீரை இலவச இணைப்பாக தருகிறது. வேறு சில வீடுகளிலும், தொட்டிகளில் கழிவுநீர் கசிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இதையடுத்து, அப்பகுதியில் கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் பார்வையிட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்த அவர், தேவைப்பட்டால், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, போதிய நிதி அளிப்பதாகவும் கூறினார்.உக்கடம் குளத்தில் மோட்டார் படகு இயக்கப்படுவதால், நீரில் டீசல் கலந்து, மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, குளத்துக்குள் படகில் பயணம் செய்து ஆய்வு செய்த அவர், "இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி, முடிவெடுக்கப்படும்" என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X