மின் இணைப்பு வழங்க ஆலோசனை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
பல்லடம்:அறிவொளி நகருக்கு மின் இணைப்பு கிடைக்க, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என, பல்லடம் தாசில்தார் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.பல்லடம், அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர், மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி, மந்தை புறம்போக்கில் இருந்து வகை மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், மின் இணைப்பு

பல்லடம்:அறிவொளி நகருக்கு மின் இணைப்பு கிடைக்க, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என, பல்லடம் தாசில்தார் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.பல்லடம், அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர், மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி, மந்தை புறம்போக்கில் இருந்து வகை மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், மின் இணைப்பு வழங்க மின் வாரியம் மறுப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. தாசில்தார் நந்தகோபால் கூறுகையில், ''அரசு, பல்வேறு துறைகளின் கீழ் நிலங்களை வகைப்படுத்தி உள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் ஒப்புதல் பெற்ற இடத்துக்கு மின் இணைப்பு வழங்கலாம். ஆனால், சில குடியிருப்புகள் மந்தை புறம்போக்கு என இருப்பதால், கால்நடை துறை, வீட்டு வசதி வாரியத்தின் ஒப்புதல் வேண்டும்,'' என்றார்.முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நடராஜன் பேசுகையில், ''ஒரு துறையிலிருந்து இடத்தை பெறும்போது, அதற்கு ஈடாக மாற்று இடம் வழங்க வேண்டும். அரசு நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் கோர்ட் உத்தரவிட்டதால், தற்போது, மந்தை புறம்போக்காக இருந்த இவர்கள் வசித்து வரும் இடத்தை, மாற்றுவதில் சிக்கல் உள்ளது,'' என்றார்.மின் இணைப்பு பெற, வீட்டு வசதி வாரியம், கால்நடை துறை ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், மேற்கூறிய துறை அதிகாரிகளை அமைதி பேச்சுக்கு அழைத்து, அதன் மூலம் தீர்வு காணலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதனை, அறிவொளி நகரில் வசிப்போர், ஏற்று கொண்டதால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X