'ஸ்மார்ட் சிட்டி' திட்ட முறைகேடு; முதல்வரிடம் அறிக்கை:மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திருப்பூர்;''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த ஒருநபர் கமிஷன் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.சட்டசபை கூட்டத்தில் இது குறித்து முதல்வர் அறிவிப்பார்'' என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று காலை, மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர்
'ஸ்மார்ட் சிட்டி' திட்ட முறைகேடு; முதல்வரிடம் அறிக்கை:மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

திருப்பூர்;''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த ஒருநபர் கமிஷன் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது.சட்டசபை கூட்டத்தில் இது குறித்து முதல்வர் அறிவிப்பார்'' என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று காலை, மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். கடந்த கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தியதையடுத்து, அம்ரூத் திட்டத்தில் பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் பிரச்னை குறித்து முறையிட்டனர்.
கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:ராஜேந்திரன் (இ.கம்யூ.,): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தெற்கு தொகுதியில் மட்டுமே பணிகள் அதிகம் நடந்துள்ளது. பணிகளிலும் ஏராளமான முறைகேடு நடந்துள்ளது. பணிகள் குறித்த விவரம் கேட்டால் அதிகாரிகள் உரிய பதில் தருவதில்லை.செல்வராஜ் (இ.கம்யூ.,): மழைநீர் வடிகால் மழைநீரில் கரைந்து செல்கிறது. கொரோனா மருந்து வாங்கியது உட்பட பல வழியில் முறைகேடு நடந்துள்ளது. நிர்வாகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஒரே நபருக்கு பல பணிகள் வழங்கியுள்ளனர். அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.கோவிந்தசாமி (தி.மு.க.,): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப்பு குறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும். ரோடு, குழாய்கள் சேதமடைந்து மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். பெயர் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டம். ஆனால், நகரப் பகுதி 'ஸ்மார்ட்'டாக இல்லை.அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து சிறப்பு குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்க வேண்டும்.நாகராஜ் (ம.தி.மு.க.,): பணிகளில் கவனம் செலுத்தாத ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளால் ஆட்சிக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் அவப் பெயர் ஏற்படுகிறது.உமா மகேஸ்வரி(தி.மு.க.,): அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் முறையாக பணி நடக்கும் இடங் களில் ஆய்வு செய்ய வேண்டும். பணி நடக்கும் விவரம், மாற்று வழி என விவரங்கள் தெரிவிக்க வேண்டும்.குணசேகரன் (பா.ஜ.,): பணிகளில் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லை. அரசு நிதி பங்களிப்பு குறித்து விவரம் அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து தகவல் தர வேண்டும்.செழியன் (த.மா.கா.,): பணிகள் தாமதமாக நடக்கிறது. வார்டு பகுதிக்குள் தலைகாட்ட முடியவில்லை.அருணாசலம் (இ.கம்யூ.,): அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு உரிய குடிநீர் வசதியில்லை.
எனது வார்டு பகுதியில் 425 விளக்குகள் பொருத்த வேண்டும். இருட்டைப் பயன்படுத்தி போதை, வழிப்பறிக்கும்பல் அட்டகாசம் செய்கின்றனர்.மணிமேகலை (மா.கம்யூ.,): சாக்கடை குழாய், குடிநீர் குழாய் இரண்டும் ஒரே இடத்தில் பதிக்கப்படுகிறது. வடிகாலில் பாலிதின் கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது.சாமிநாதன் (தி.மு.க.,): மாநகராட்சியில் இணைக்கப்பட்ட எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இது வரை முழுமையாக செய்யாமல் உள்ளது.ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): நகரப் பகுதியில் கான்கிரீட் ரோடு தேவையில்லாதது. பெருமளவு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. துாய்மைப்பணியாளருக்கு கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும். 'ஸ்மார்ட்சிட்டி' முறைகேடு குறித்த ஒரு நபர் கமிஷன் அறிக்கை நிலை என்ன ஆயிற்று?செந்தில்குமார் (காங்.,): ஒப்பந்த பணிகளில் சப் கான்ட்ராக்ட் நடக்கிறது. சிலர் முறைகேடாக குழாய் இணைப்புக்கு பணம் வசூலிக்கின்றனர்.மண்டல குழுவுக்கு அதிகாரம் அளித்து அங்குள்ள பிரச்னைகள் தீர்க்க வேண்டும். தென்னம்பாளையம் சுகாதார பணியாளர் குடியிருப்பில், மழை நாளில் வீடுகளில் மின்சாரம் பாய்கிறது. 3 மாதம் முன்னர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இன்னும் அந்த நிலை உள்ளது.சாக்கடை கால்வாய்கள் துார்வாரும் பணி எனது வார்டில் துவங்கப்பட்டது. ஆனால் இது வரை பணி முழுமையாக முடிக்கவில்லை. மாநகராட்சி பள்ளிகளில் பயிற்றுவித்தல் தவிர அனைத்து அதிகாரமும் மாநகராட்சி நிர்வாகம் வசம் வர வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.மேயர் தினேஷ்குமார் பேசுகையில், ''ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த ஒருநபர் கமிஷன் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு சட்டசபை கூட்டத்தில் இது குறித்து முதல்வர் அறிவிப்பார். மாநகராட்சிக்குச் சொந்தமான ரிசர்வ் சைட் அனைத்தும் கண்டறிந்து வேலி அமைத்து பாதுகாக்கப்படும்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X