நல்லுார் கோவில் நிலங்கள் 400 ஏக்கர் எங்கே?| Dinamalar

நல்லுார் கோவில் நிலங்கள் 400 ஏக்கர் எங்கே?

Added : ஆக 30, 2022 | |
திருப்பூர்:நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலங்களை கண்டறியும் பணி நேற்று துவங்கியுள்ளது.திருப்பூர், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலம், 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இதுதொடர்பாக, இணை கமிஷனர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவுப்படி,
நல்லுார் கோவில் நிலங்கள் 400 ஏக்கர் எங்கே?

திருப்பூர்:நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலங்களை கண்டறியும் பணி நேற்று துவங்கியுள்ளது.திருப்பூர், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலம், 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இதுதொடர்பாக, இணை கமிஷனர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவுப்படி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறியும் பணி துவங்கியுள்ளது. அதன்படி, வருவாய்த்துறையுடன் இணைந்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நேற்று துவங்கியது.கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், பெரும்பாலும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தாலும், ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி தீவிரமடைந்துள்ளது.செயல் அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி - விசாலாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை கண்டறிய, 'சர்வே' பணி துவங்கியுள்ளது. மொத்தம், 400 ஏக்கர் அளவுக்கு நிலம் உள்ளதாக, ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.கட்டடம் இருந்தாலும், ஆக்கிரமிப்புதாரரே முன்வந்தால், குறைவான வாடகை செலுத்தி தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படும். இல்லாதபட்சத்தில், இணை கமிஷனர் கோர்ட் வழிகாட்டுதல்படி, கோவில் நிலம், அதில் உள்ள கட்டடம் கையகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X