இலவச கல்வி திட்டத்தில் கட்டணம் குறைப்பு: தனியார் பள்ளிகள் அதிருப்தி

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்கான மாணவர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி மாணவர்கள் படிக்கலாம்.எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும்போது, இந்த சலுகையை பெற
Right to Education, Schools, School fee

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்கான மாணவர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி மாணவர்கள் படிக்கலாம்.எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும்போது, இந்த சலுகையை பெற முடியும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து, அந்த கட்டணம் அரசின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், 12 ஆயிரத்து 76 ரூபாய்; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 15 ஆயிரத்து 711 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையானது, கடந்த முறை நிர்ணயித்த தொகையை விட குறைவு. கடந்த ஆண்டைவிட, 382 ரூபாயில் இருந்து 1,395 ரூபாய் வரை கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலவச திட்டத்தில் மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-ஆக-202212:24:33 IST Report Abuse
duruvasar பகுத்தறிவு தான் விஞ்ஞானம். விஞ்ஞானம் தான் ஊழலுக்கு மூலாதாரம். இதுதான் திராவிட மாடல். இதை பின்பற்றுபவன் ....
Rate this:
Cancel
30-ஆக-202208:38:47 IST Report Abuse
Naresh Kumar 0
Rate this:
Cancel
30-ஆக-202206:25:01 IST Report Abuse
Tapas Vyas முதல்ல அந்த பணத்மையும் கொடுக்காமல் பள்ளி நடத்த அனுமதி தர 25% மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டாவிட்டால் அனுமதியை தகுதியிழப்பு செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்-கொள்ளைக்காரர்களில் தனியார் பள்ளி-மருத்துவமனைகள்-மதநிறுவனங்கள் முதலிடம் வகிக்கிறது.
Rate this:
Kannan Chandran - Manama,பஹ்ரைன்
30-ஆக-202213:18:25 IST Report Abuse
Kannan Chandranஅரசு பள்ளிகளில் கல்வி இலவசம் என நீங்கள் நினைத்தால், அது அறியாமை, சராசரியாக ஒரு மாணவனுக்கு அரசு (அதாவது மக்களின் வரிப்பணம்) செய்யும் செலவு, தனியாரைவிட மிகவும் அதிகம், ஆக அரசு முதலில் சரி செய்ய வேண்டியது அரசு பள்ளிகளின் தரத்தை... அரசு பள்ளிகள் கல்வி தரமாக இருந்தால் ஏன் தனியாரிடம் செல்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X