கழிவு மேலாண்மையை கண்காணிக்க அதிகாரி நியமிக்க தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சென்னை : 'கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும்' என, தமிழக தலைமை செயலருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருச்சியில், 1,000 ஆண்டுகள் பழமையான சோழர் கால நீர்ப்பாசன கால்வாயான உய்யகொண்டான் கால்வாய், குப்பைகள் கொட்டுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் மாசுபட்டுள்ளது.

சென்னை : 'கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும்' என, தமிழக தலைமை செயலருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில், 1,000 ஆண்டுகள் பழமையான சோழர் கால நீர்ப்பாசன கால்வாயான உய்யகொண்டான் கால்வாய், குப்பைகள் கொட்டுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் மாசுபட்டுள்ளது. கால்வாய் துார் வாரப்படாததால், சாகுபடி தாமதமாவது குறித்து, 2020 ஜூலை 13ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:உய்யகொண்டான் கால்வாயை துார்வாரி, கழிவுநீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அளிக்குமாறு, திருச்சி மாநகராட்சி, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டது.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'திருச்சி மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும், உய்யகொண்டான் கால்வாயில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுவதை தடுக்க முடியும்' என்றார்.திருச்சி மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், 'பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில், 2023-ம் ஆண்டுக்குள் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படும். கால்வாயில் குப்பைகள் கொட்டுவதையும், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால், உய்யகொண்டான் கால்வாயில், கழிவுநீர் விடப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் அறிக்கையில் எதுவும் இல்லை.கழிவு மேலாண்மை விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க, கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை, மாநில தலைமை செயலர்கள் நியமிக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதை தமிழக தலைமை செயலர் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X