கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை'

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சென்னை : 'மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக ஆதாரம் எதுவும் இல்லை' எனக்கூறிய சென்னை உயர் நீதிமன்றம், 'மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து அச்சுறுத்தலை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது துரதிருஷ்டவசமானது' என்றும் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், தாளாளர் ரவிகுமார், அவரது மனைவி சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா,
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை'

சென்னை : 'மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக ஆதாரம் எதுவும் இல்லை' எனக்கூறிய சென்னை உயர் நீதிமன்றம், 'மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து அச்சுறுத்தலை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது துரதிருஷ்டவசமானது' என்றும் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், தாளாளர் ரவிகுமார், அவரது மனைவி சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிபிரியா ஆகியோர், 2022 ஜூலை 18ல் கைது செய்யப்பட்டனர். இவர்களது ஜாமின் மனுக்கள், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி இளந்திரையன், மனுக்களை விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர் தங்கசிவன் வாதாடினர்.

ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை. மாணவி எழுதி வைத்த தற்கொலை குறிப்பை பார்க்கும் போது, வேதியியல் பாடத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை தெரிவித்துள்ளார். கவனச் சிதறல் இன்றி படிப்பில் கவனம் செலுத்த, தங்கள் குழந்தைகளை உறைவிட பள்ளிகளில், பெற்றோர் சேர்ப்பது பொதுவாக நடக்கிறது.

அதிக மதிப்பெண் எடுத்தால் தான், நல்ல கல்லுாரிகளில் மேற்படிப்புக்கு இடம் கிடைக்கும் என, குழந்தைகளை வற்புறுத்துகின்றனர். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலை துரதிருஷ்டவசமானது. 'நல்லா படிக்க வேண்டும்' என மாணவர்களுக்கு அறிவுறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது. தற்கொலை குறிப்பிலும் கூட, தற்கொலைக்கு மனுதாரர்கள் துாண்டியதாக காட்டுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

பாடங்களை சொல்ல சொல்வதும், படிக்க சொல்வதும் ஆசிரியர்களின் பணி. அது, தற்கொலைக்கு துாண்டியதாக ஆகாது. எனவே, மனுதாரர்களுக்கு எதிராக, தற்கொலைக்கு துாண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொருந்தாது. இருந்தாலும், மாணவியின் இறப்புக்கு, இந்த நீதிமன்றம் தன் வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது.

பள்ளி தாளாளர், அவரது மனைவி மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து, நான்கு வாரங்களுக்கு தல்லாகுளம் போலீசில் காலை, மாலையில் ஆஜராக வேண்டும்; ஆசிரியைகள் இருவரும் சேலத்தில் தங்கியிருந்து, செவ்வாய்பேட்டை போலீசில் காலை, மாலையில் ஆஜராகவும் உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X