ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: சசிகலா, விஜயபாஸ்கர் உட்பட நால்வரிடம் விசாரணை?

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை : துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கைகளை, சட்டசபையில் தாக்கல் செய்ய, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 7:15 வரை நீடித்தது. * துாத்துக்குடி துப்பாக்கி
Jayalalithaa,Vijayabhaskar,Sasikala

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கைகளை, சட்டசபையில் தாக்கல் செய்ய, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 7:15 வரை நீடித்தது.

* துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கை, மே 18ல் அரசிடம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


latest tamil news
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 17 போலீசார்; மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனையில் உள்ளன. அந்த துறைகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அதற்கான விபர அறிக்கையுடன், கமிஷன் இறுதி அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையும், 27ம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைப்படி, சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது, விசாரணைக்கு உத்தரவிட, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள் பெற முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அது தொடர்பான விபர அறிக்கையுடன், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* 'ஆன்லைன் ரம்மி' உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாய கேடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விளையாட்டுக்களை தடை செய்ய, அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202219:28:57 IST Report Abuse
பேசும் தமிழன் ஒருவர் கூடவே இருந்தவர்.... மற்றவர் அவரது உறவினர்... அவர் தான் வீட்டில் மருந்து மாத்திரை கொடுத்தவர்.... அவர்களை இதுவரை விசாரிக்காமல் கமிஷனில் அப்படி என்ன விசாரணை நடந்தது????
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
30-ஆக-202219:04:19 IST Report Abuse
Devanand Louis தமிழக அரசின் கவனத்திற்கு - மதுரை திருமங்கலம் நகராட்சியின் பலவித தில்லுமுல்லு வேலைகள் , கிழ்கண்ட பணிகளில் தமிழக அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் திருமங்கலம் நகராட்சியின் சவாதிகரப்போக்கால் வருவாய் கிடைப்பதில்லை புதிய வீட்டிற்கு வீட்டுவரிப்போட போடா ரூபாய் 10000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய வீட்டிற்கு தண்ணீர் சப்ளை பெற ரூபாய் 5000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய வீடுகட்ட பிளான் சாங்க்ஷன் செய்ய ரூபாய் 100000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய கடைகளுக்கு தொழில் வரி வாங்குவதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்கிறார்கள் புதிய கடைகளுக்கு உரிமம் வழங்க ரூபாய் 25000 லஞ்சம் கேட்கிறார்கள் மேற்கண்ட லஞ்ச வசூலினால் திருமங்கலம் ஏரியா மக்களெல்லோரும் நகராட்சியின் இந்த லஞ்ச பிரச்சனையால் யாரும் சொத்து வரிக்கு விண்ணப்பிக்காமல் ,தொழில் வரி மற்றும் உரிமம் பெறாமலும் உளார்கள் . நகராட்சியின் இந்த கேடுகெட்ட லஞ்சம் வாகும் வேலைகளால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் வரவில்லை . நகராட்சியின் இந்த சர்வாதிகாரப்போக்கை கண்டு மக்கள் கொதிப்படைந்துளார்கள் . இது திருமங்கலம் நகராட்சியின் அவலம் தமிழ்நாட்டில் எதனை நகராட்சியில் இந்த மாதியான அவலம் தொடர்கிறது என்று கணக்கிட்டு பார்த்த பல கோடி பணம் வருவாயை நகராட்சி ஊழியர்கள் கெடுகிறார்களா அல்லது தமிழக அரசு கெடுகிறதா என்பது மக்களுக்கு புரியவில்லை
Rate this:
Cancel
Swamy - pondicherry,சவுதி அரேபியா
30-ஆக-202214:33:36 IST Report Abuse
Swamy உண்மை என்றும் நீங்கள் வெளிக்கொணர போவதில்லை......அதனால் இந்த கேஸை முடிப்பது நலம். மக்கள் வரி பணமாவது மிஞ்சும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X