ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சால் பரபரப்பு

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சிவகாசி : விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டியில் மூன்று சக்கர வாகனம் கோரி வழங்கிய மனு குறித்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளியிடம், 'நான் உங்கள் வேலைக்காரன் அல்ல' என, சாத்துார் ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரகுராமன் பேசிய 'ஆடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஊறுகாய் வியாபாரம் செய்யும் திருமலைகுமார், ஜூலையில் தாயில்பட்டி வந்த எம்.எல்.ஏ., ரகுராமனிடம் தனக்கு மூன்று
ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சால் பரபரப்பு

சிவகாசி : விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டியில் மூன்று சக்கர வாகனம் கோரி வழங்கிய மனு குறித்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளியிடம், 'நான் உங்கள் வேலைக்காரன் அல்ல' என, சாத்துார் ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரகுராமன் பேசிய 'ஆடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஊறுகாய் வியாபாரம் செய்யும் திருமலைகுமார், ஜூலையில் தாயில்பட்டி வந்த எம்.எல்.ஏ., ரகுராமனிடம் தனக்கு மூன்று சக்கர வாகனம் வேண்டும் என, மனு வழங்கினார்.மனுவின் நிலை என்னவென அறிய, எம்.எல்.ஏ.,வை அவரது மொபைல் போனில் அழைத்து, சில நாட்களுக்கு முன் திருமலைக்குமார் கேட்டுள்ளார்.

எம்.எல்.ஏ., ''அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் வேலைக்காரன் அல்ல. யாரையாவது வைத்து இந்த வேலையை பார்த்து கொள்ளுங்கள்.''அதிகாரிகள் யாரும் சொன்னவுடன் செய்து விட மாட்டார்கள். உங்களுடைய மனுவை தனியாக எடுத்து வைத்து விடுகிறேன்,'' என, பேசிய ஆடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

திருமலைகுமார் கூறுகையில், ''அரசு நலத்திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்தேன். அந்த வாகனம் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும். எம்.எல்.ஏ.,விடம் மனு வழங்கியது குறித்து கேட்டேன்,'' என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

ரகுராமன் எம்.எல்.ஏ., கூறுகையில், ''பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். அனைவரிடமும் என் மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளேன். யார் எப்போது அழைத்தாலும் பேசுவேன்.''மூன்று சக்கர வாகனம் குறித்து அதிகாரியிடம் பேசிய போது, 70 சதவீதம் மாற்றத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும். இவருக்கு, 60 சதவீதம் மட்டுமே உள்ளது என்றனர். '' அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வலியுறுத்தியுள்ளேன். ஆனால், இவர் அடிக்கடி மொபைலில் அழைத்து தொந்தரவு செய்தார்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
30-ஆக-202217:59:31 IST Report Abuse
DVRR 70 சதவீதம் மாற்றத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும். இவருக்கு, 60 சதவீதம் மட்டுமே உள்ளது???பெரியார் மண், திருட்டு திராவிட மடியல் அரசு , திராவிட மாடல் இது தான் என்று தெள்ளத்தெளிவாக இந்த கம்பாரிசோனில் தெளிவாகின்றது????அப்புறம் 69% இருந்தாலும் கொடுக்க முடியாது என்று வெளிவரும் பேஷ் நெஸ் திராவிட மாடல் ????
Rate this:
Cancel
mani - thirumayam,இந்தியா
30-ஆக-202210:03:50 IST Report Abuse
 mani வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடரட்டும் உங்கள் மீது தவறு இல்லை .
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
30-ஆக-202209:05:24 IST Report Abuse
Narayanan Normally MLA will speak like this only after wining the post. Here MLA must have taken this issue with CM directly, if the officers say that the help will be extended only with 70 % affected person not for 60%. Or he must have explain the fact to the concern person . All politician are servant to public. If they don't want to be . than they can go out of assembly by submitting their resignation. Second thing this matter is very simple because Stalin is their party's alliance partner. Stalin would have helped after collecting their amount .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X