'மொபைல் போன் டவரில்'பொதுமக்கள் போராட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் அருகே 'மொபைல் போன் டவர்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த கோபுரம் மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காங்கியனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது காலி மனையில், கடந்த வாரம் தனியார் நிறுவனம் மொபைல் போன் டவர் அமைத்தது.எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை,
'மொபைல் போன் டவரில்'பொதுமக்கள் போராட்டம்



விழுப்புரம்,-விழுப்புரம் அருகே 'மொபைல் போன் டவர்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த கோபுரம் மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காங்கியனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது காலி மனையில், கடந்த வாரம் தனியார் நிறுவனம் மொபைல் போன் டவர் அமைத்தது.எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 11:30 மணிக்கு டவர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது திடீரென, ஏழு பேர் டவர் மீது ஏறி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். பின், டவர் மீது இருந்தவர்கள் கீழே இறங்கினர். பகல், 12:30 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு, பொதுமக்கள் கலைந்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X