சிறுகடம்பூர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நுால் வெளியீட்டு விழா

Added : ஆக 30, 2022 | |
Advertisement
செஞ்சி-செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் அன்னை ஓம் பவதாரணியின் நுால் வெளியீட்டு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன், காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரர், வித்யா கணபதி, சுப்ரமணியர், நுாதன சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் மகா
சிறுகடம்பூர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நுால் வெளியீட்டு விழா



செஞ்சி-செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் அன்னை ஓம் பவதாரணியின் நுால் வெளியீட்டு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரணி நகர் கருமாரியம்மன், காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரர், வித்யா கணபதி, சுப்ரமணியர், நுாதன சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி காலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. அன்று மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. 28ம் தேதி காலை 8:00 மணி, மாலை 5:30 மணியளவில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.இந்நிகழ்ச்சிகளில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் 25ம் குரு மகா சந்நிதானம் கயிலை சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்றனர்.நேற்று காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கியது. 9:30 மணிக்கு யாத்ரா தானமும், 9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, அன்னை ஓம் பவதாரணி முன்னிலையில் ஆச்சாள்புரம் ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் விமான மஹா கும்பாபிேஷகமும், தொடர்ந்து அனைத்து மூலவருக்கும் மஹா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, 10:30 மணியளவில், அன்னை ஓம் பவதாரணி இயற்றிய 'சிங்கபுர வரலாறும் அரங்கனின் பெருமையும்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.திருவண்ணாமலை பகவான் யோகிராம் சுரத்குமார் அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர் மாதேவகி முன்னிலையில் அமைச்சர் மஸ்தான் நுாலை வெளியிட்டார். அன்னை ஓம் பவதாரணி ஆசியுரை நிகழ்த்தினார்.ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், தொழிலதிபர்கள் கோபிநாத், பாபு, பிரேம்குமார். கட்டட வடிவமைப்பாளர் மைதிலி ஜெயச்சந்திரன், பொறியாளர் சந்தானகிருஷ்ணன், உதவி பேராசிரியர் மகேஸ்வரி, ஸ்வேத பத்மாசனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் உமா உட்பட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, அன்னை ஓம் பவதாரணி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X