முன்விரோத தகராறில் வீடு, கடை மீதுபெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில், முன்விரோதம் காரணமாக, கடை, வீடு ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ரோஷணை காலனியைச் சேர்ந்தவர் மன்னார் மகன் ராஜ்குமார், 32. இவர், திண்டிவனத்தில் உள்ள காம்ப்ளக்சில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். ரோஷணை காலனி முனியன் தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் பிரவீன்குமார், 28;
முன்விரோத தகராறில் வீடு, கடை மீதுபெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது



திண்டிவனம்-திண்டிவனத்தில், முன்விரோதம் காரணமாக, கடை, வீடு ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ரோஷணை காலனியைச் சேர்ந்தவர் மன்னார் மகன் ராஜ்குமார், 32. இவர், திண்டிவனத்தில் உள்ள காம்ப்ளக்சில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். ரோஷணை காலனி முனியன் தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் பிரவீன்குமார், 28; இவர், மீது சாராய வழக்குகள் உள்ளது. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில், ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் பிரவீன்குமாரை தாக்கினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:15 மணியளவில், பூட்டியிருந்த ராஜ்குமார் கடையில் பிரவீன்குமார், பெட்ரோல் குண்டு வீசினார். இதில் கடையின் முன்பகுதி எரிந்தது. தொடர்ந்து, ராஜ்குமார் வீட்டிலும் பெட்ரோல் குண்டை வீசினார். இதனால் வீட்டிலிருந்து பொருட்கள் எரிந்தன.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தப்பியோடிய பிரவீன்குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து, ரோஷணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், பிரவீன்குமார் மீது வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் அதே பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி மணிமாறன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் மணிமாறனை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது மணிமாறன், பிளேடால் மார்பு, கையில் கிழித்துக்கொண்டார். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சைக்குப் பின் அவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X