மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் சிறை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
புதுக்கோட்டை : பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், சாகும் வரை ஆயுள் தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 43; அவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு, முருகேசன் தன், 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில், சிறுமி கர்ப்பமடைந்தார்.மகள் ஏழு மாதம் கர்ப்பிணியாக
மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை : பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், சாகும் வரை ஆயுள் தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 43; அவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு, முருகேசன் தன், 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில், சிறுமி கர்ப்பமடைந்தார்.மகள் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த சிறுமியின் தாய், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, 'போக்சோ' சட்டத்தில் முருகேசன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

விசாரணையின் போது, சிறுமியிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், 'தந்தை தான் கர்ப்பத்துக்கு காரணம்' என்று கூறினார்.இந்த வழக்கில், நேற்று புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X